தமிழ் குறுக்கெழுத்து 9 – விடைகள்

This gallery contains 2 photos.

எதிர்புறமாக எழுதும்படியான குறிப்புகள் இனி தவிர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். The New York Times, The Hindu என்று ஜாம்பவான்கள் எல்லாம் இன்னும் தங்கள் தளத்திலேயே புதிர் விடுவிக்கும் வசதியைத் தராத போது நமக்கென்ன அவசரம்? குறுக்கெழுத்து 9-க்கான விடைகள்:

தமிழ் குறுக்கெழுத்து 9

பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. குறுக்கும் நெடுக்குமாக யோசித்து விடைகளை எழுதித் தள்ளுங்கள் – மின்னஞ்சலில்.

கைகுலுக்க, காலை வாரிவிட, கருத்து சொல்ல, கடிந்துரைக்க:

vijayshankar.twwi@gmail.com

மின்னஞ்சல் வெறுப்பவர்கள் மறுமொழி பகுதியில் விடை சொல்லுங்கள்.

இடமிருந்து வலம்:

1. ஆங்கில முதலெழுத்தின் எதிர்பாராத இடப்பெயர்ச்சி (5)

3. வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)

4. நாயாய் நகைச்சுவை செய் (2)

9. இதுவும் பழம்பொருள் காப்பகமே (3)

10. பாடியவர்க்கும் கேட்டவருக்கும் நாட்டுப்பற்று என்ற மா வரம் தந்தே வெள்ளையரை விரட்டச் செய்த கீதம் (3,4)

11. தாய் _______ வணக்கம் – திரும்பியிருக்கிறது  (3)

12. பாற்கடல் தந்த திரவத்தினும் தித்திக்கும் தமிழ்  (6,3)

16. பாடல் பேரழகி (3)

17. அரவு முடி வசதியாக கையில் சிக்கிட, தியாக  குணம் நீக்கி நிறைவேற்றிய தீர்மானம் (4,3)

18. முதல் உணவு சீரணம் ஆகாததால் குடலில் விளைந்த புண் (3)

19.  அதிகமாக (2)

20. பயத்தில் பெயர் மறந்த பேசும் பறவை (2)

21. இந்திரா காந்தி எழுதிய புதிரில் எழுத்துக்களுக்குப் போதைய இடமில்லை

மேலிருந்து கீழ்:

1. ஏன் கவலை என்றெண்ணாது படித்ததால் விரல் போனது தான் மிச்சம் (5)

2. மேல் தளம் (2)

3. நன்றியுடன் நுகர்தல் (4)

5. சிறைசென்று திரும்பிய மகளைத் தந்தை இப்படித் தான் கொஞ்சி வரவேற்றிருக்க வேண்டும்  (3,5)

6. முட்டாள் மண்டையில் ஆனந்த பூமி (4)

7. பாரதியார் ஆசிரியராய்ப் பணியாற்றிய ஓர் நாளிதழ் (8)

8. அங்கீகாரமற்ற அதிவேக செய்தி (4)

13. குப்புற விழுந்ததால் மேன்மை இழந்ததோ மாணிக்கவாசகரின் படைப்பு?(4)

14. சுபா சிரித்தால் வேலை கிடைப்பது நிச்சயம் (4)

15. ஒரு வகை மரத்தடியில் ஒரு கசையடி (5)

17. பிள்ளைத் தமிழ் சொல்லும் நிலாப் பருவம் (4)

19. அதிகமாக (2)

தமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள்

This gallery contains 1 photo.

சத்தியமாக சுயநினைவுடன் தான் இதை எழுதினேன். அரை மயக்கம், கால் மயக்கம் எதுவும் இல்லை. Continue reading

ஒளிவேகமும் சில முந்திரிக் கொட்டை நியூட்ரினோக்களும்

பிரபஞ்சத்தில் ஒளிக்கென்று ஒரு வேக வரம்பு இருக்கிறது. அது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் என்பதாகும். இதனினும் வேகமாகப் பயணிக்க எந்தப் பயலுக்கும் (அலையானாலும் சரி, துகளானாலும் சரி) அனுமதியில்லை. அவ்வாறு இந்த வரம்பை மீறினால் என்னவாகும்?

சின்ன வயசில் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஐன்ஸ்டீனின் நிறை-ஆற்றல சமன்பாட்டை

E=mc2

என்று எழுதிக் காட்டினார்கள்.

ஆனால் முழு சமன்பாடு இதுதான்:

இந்த சமன்பாட்டைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இதில் ‘m’ என்பது நிறை, ‘v’ என்பது நாம் எடுத்துக்கொள்ளும் பொருளின் வேகம். ‘c’ என்பது ஒளியின் வேகம். யாராவது ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் கதி என்னவாகும்? மேற்படி சமன்பாட்டில் அவர்களின் வேகம் ‘c’க்கு நிகராகி விட்டதால் ‘v/c’ -இன் பதிப்பு 1 என்றாகிவிடும். அதனால் என்ன என்கிறீர்களா? நமது சமன்பாடு இப்போது

என்றாகிவிடும். சுழியத்தால் எந்த என்னை வகுத்தாலும் கிடைப்பது முடிவிலி (infinity) என்று நமக்கு அடித்துச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா?

அப்படியானால் இந்த ஒளிவேக பயணியின் ஆற்றல் கணக்கிடமுடியாத படி முடிவிலியாக மாறிடும். இது இயற்கைக்குப் புறம்பானது. இதனால் தான் விரலுக்கேற்ற வீக்கமும் நிறைக்கேற்ற வேகமும் தேவை என்றார்கள்.

இவ்வாறு நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே சுவிசர்லாந்தில் புறப்பட்ட சில நியூட்ரினோக்கள்1 குறித்த நேரத்தை விட 60 நானோ வினாடிகள் சீக்கிரமாகவே இத்தாலியை2 வந்தடைந்தன. இப்படி அவை வர இரண்டு காரணங்கள் தான் இருக்க வேண்டும்.

  1. இந்த நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணித்திருக்க வேண்டும்.
  2. இந்த சோதனையில் ஏதோ குளறுபடி (இயந்திரதிலோ அல்லது கணக்கீட்டிலோ) இருந்திருக்க வேண்டும்.

இரண்டாம் காரணத்தை உறுதிசெய்ய, அல்லது நிராகரிக்க இரண்டாம் முறையாக சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் இந்த நியூட்ரினோக்கள் முண்டியடித்துக் கொண்டு ஒளியினும் வேகமாக வந்தடைந்தன. சரி, இதனால் என்ன குடியா முழுகிவிடும்? இல்லை அரிசி விலைதான் குறையப் போகிறதா? இல்லை.

இயற்பியலாளர்கள் இதுவரை ஒளிவேகமே பிரபஞ்சத்தில் மிகுவேகம்; அதுவே பிரபஞ்ச சாலையில் வேக வரம்பு என்ற அடிப்படையில் கோட்பாடுகளையும் சமன்பாடுகளையும் உருவாக்கி வந்திருக்கின்றனர். இப்போது ஒளியை விட அதிக வேகத்தில் பயணிக்க இயலும் என்றால் இந்த சமன்பாடுகளும் கோட்பாடுகளும் அடிபட்டுப் போகும்.

அரசு ஊழியர்களுக்கு அரியர்ஸ் தருவது போல, தேர்வில் நான் பிழையாக எழுதிய சமன்பாடுகளுக்கு இப்போது முழு மதிப்பெண்கள் தருவார்களா? பேராசை தான்.

சில ‘தெரிந்தால் நலம்’ தகவல்கள்:

1. நியூட்ரினோ என்பது ஒருவகை அடிப்படை துகள். மிகக் குறைந்த நிறை கொண்டது. எதனுடனும் வினைபுரியாது; ஆதலால் எளிதில் இதனை உணரவோ (detect செய்யவோ) ஆராயவோ முடிவதில்லை.
2. OPERA என்ற ஆய்வில் CERN ஆய்வுக்கூடத்தில் ப்ரோட்டோன்களை தலைதெறிக்க ஓடி ஒன்றுடன் ஒன்று மோதச் செய்து, அவற்றை ஆயிரம் மீட்டர் நீள சுரங்கப்பாதை வழியாக ஓடவிடுகிறார்கள். வழியில் இவை நியூட்ரினோக்களாக மாறி, கடும் பாறைகளில் கூட சிக்காமல், 732 கிலோமீட்டர்களை அனாயசமாகக் கடந்து, இத்தாலியில் உள்ள கிரான் சாசோ (Gran Sasso) ஆய்வகத்தில் உள்ள டிடெக்டர்களை வந்தடைகின்றன.

இரண்டு நிமிட அறிவியல் – நீரின்றி அமையாது அலகு

பெரும்பாலான தமிழ் நாளிதழ்களில் ‘இன்றைய வெப்பநிலை’ என்ற பகுதியில் 98 டிகிரி, 102 டிகிரி என்று போடுகின்றனர். பள்ளி நாட்களில் இப்படி எழுதுகையில் ’98 கழுதையா குதிரையா?’ என்று நம் அறிவியல் ஆசிரியர் மண்டையில் கொட்டியிருப்பார்.

இங்கே அவர்கள் குறிப்பிட விரும்புவது 98 டிகிரி ஃபாரன்ஹெய்ட் என்பதையே. அதே நாளில் மற்றொரு நாளிதழ்  37 டிகிரி என்று குறிப்பிடுகிறது. எது சரி? இரண்டுமே தான். அலகுகள் தான் வேறுபடுகின்றன. இரண்டாம் நாளிதழ் 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவைக் குறிக்கிறது.

வெப்பநிலை என்ற ஒரே பண்பை அளக்க ஏன் வெவ்வேறு அலகுகள்? அளவிடும் முறைகள், அவை கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டங்கள், அரசியல் நிர்பந்தங்கள் (இங்கேயும்) என்று பல காரணங்கள்.

18-ஆம் நூற்றாண்டில் டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹெய்ட் என்பவர் பனிக்கட்டியின் உருகுநிலையையும் (32°F) மனித உடலின் சராசரி வெப்பநிலையும் (98°F ) அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்த வெப்ப அளவீட்டு முறை ஃபாரன்ஹெய்ட் என்ற அலகுக்கு வழிவகுத்தது.

இந்த 32-இல் தொடங்கி 180-இல் முடிக்கும் வேலை எல்லாம் வேண்டாம். சுழியத்தில் தொடங்கி நூறில் முடியும் படியாக – நூறு படிகளாக (சென்டிகிரேடு) எளிய அளவீட்டு முறை இதோ என்று ஆண்டர்ஸ் செல்சியஸ் 1742-இல் புதியதோர் அலகை உலகுக்கு ஈந்தார். நாளடைவில் இது செல்சியஸ் என்ற பெயரிலேயே வழங்கப் படுவதாயிற்று.

இவ்வாறாக, பல்வேறு கணியங்களைப் போலவே வெப்பநிலை அளவீட்டிலும் நீரின் தன்மையே அளவுகோளாகப் பயன்படுகிறது. இது தவிர கெல்வின், ரான்கின் என்று வேறு சில அலகுகளும் உள்ளன. (உடல் சூட்டைத் தணிக்கிறேன் பேர்வழி என்று டாஸ்மாக் தண்ணி அடிப்பவர்கள் வேறு பல அலகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.)

சுருங்கச் சொன்னால்…

 நீர் உரையும வெப்பநிலை ௦ டிகிரி செல்சியஸ் (32 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).

நீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் (212 டிகிரி ஃபாரன்ஹெய்ட்).

தசமங்களையும் நெகடிவ் எண்களையும் அதிகம் விரும்பாத அமெரிக்கர்களும் இன்ன பிற நாட்டவரும் இன்னும் ஃபாரன்ஹெய்ட் முறையையே பின்பற்றுகின்றனர். நம்மூர் செய்தித் தாள்கள் எதற்கு வம்பு என்று நடுநிலையாக எந்த அலகையும் பயன்படுத்துவதில்லை.

இதை எழுதக் காரணம் பட்டப் படிப்பு முடித்த ஒரு நண்பனுடனான இந்த உரையாடல் தான்:

நான்: போன வருஷம் மே மாசம் வெயில் 40 டிகிரிக்கு

என் முழு ஓவியத் திறனையும் கொண்டு வரைந்தது

மேல போயிடிச்சு…

நண்பன்: எந்த உலகத்துல இருக்க? 104 டிகிரி அடிச்சது பா!

எந்த உலகத்தில் இருக்கிறோம்?

மேலதிக தகவல்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/Celsius

http://www.britannica.com/EBchecked/topic/200231/Fahrenheit-temperature-scale

தமிழ் குறுக்கெழுத்து 8

இந்த முறை symmetrical grid (பார்த்தால் அப்படி தெரியவில்லையோ?) அமைத்துள்ளேன். இதன் விளைவாக இரண்டெழுத்துச் சொற்களைத் தவிர்க்க முடியவில்லை. (மோசமான குறுக்கெழுத்தின் அடையாளம்?) வழக்கம் போல் உங்களின் விடைகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

இடமிருந்து வலம்:

1.எல்லா அறிவையும் சேர்த்து பௌர்ணமியாய் பளிச்சென்று தொடங்குங்கள் (4)

4.நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)

6. சிகிச்சைக்கு முன் மருத்துவர்களும் சிரிப்பில் மங்கையரும் தருவது (4,4)

7. நேர் நேர் (2)

9. ஐயெட்டு பாடல்களி

லும் சென்னை தமிழ் என்ன! (3, 4)

11, 13. நிறைந்த அறிவுக்கு சன்மானம்? (2,2)

14. குழப்பத்தில் களவாடிய குடம் திருமடி சேர்ந்ததால் கிரீடம் அணிய வாய்ப்பு கிடைத்தது (4,3)

16. எழுதியவரும் எழுதியதும் (2)

18. உயர்ந்தோர் போற்றும் கற்புக்கரசி (4,4)

20. கேட்காது (3)

21. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர்த்து (4)

மேலிருந்து கீழ்:

1. தன் பேரில் இருந்த கடைசி சொத்து அழிந்ததும் இசுலாமியனாய் மாறிய முதுமகன் (4)

2.ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)

3. வாகன அன்பளிப்பு –  பணம் இல்லாததால் பொது போக்குவரத்தில் பயணிக்க அச்சம் (4,3)

5. அடுக்கி வைத்ததைக் கவிழ்த்துப் பார்த்தால் தேறுமா? (3)

8. சுவாமியும் நண்பர்களும் வாழ்ந்த கற்பனை நகரம் (4)

10. இதயம் போலவே இரண்டிலும் இத்தனை பகுதிகள் (3, 4)

12. வியங்கோளில் உட்காரவும் (4)

15. இதற்கு மேல் சபை, கூடினால் எல்லாம் தித்திப்பே (4)

17. எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் திறந்து புதிரை அவிழ்க்கவும் (3)

19. சித்திரத்தைக் கையாலும் செந்தமிழை நாவாலும் கற்றுக்கொள் (3)

தமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள்

This gallery contains 1 photo.

‘தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் – அவன் யார்’ என்கிற ரீதியில் கேள்விகள் இல்லையென நம்புகிறேன். Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 7

இந்த தளத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு இன்றுடன் ஏழு கழுதை வயசாகிறது. தொடர்ந்து விக்கிரமாதித்தனாய் இந்த வேதாளத்தின் புதிர்களை விடுவியுங்கள். குறுக்கெழுத்து வல்லுனர்கள் பிழைகளைப் பொறுத்தருளாமல் சுட்டிக் காட்டவும்.

இடமிருந்து வலம்:

1.வல்லினங்களில் நாலைந்தை நீக்கிப் படித்தல் நலம் (4)
2.நகரின் நடுவில் ஒரு நேரச் சிறை (6)
5.சுமக்க முடியாதபடி பெருத்த சாரல் (4)
6.பட்டுப் புடவை கட்டியதால் இறுமாப்பு? (4)

8.போர்க்களத்தில் ராமனின் பெருந்தன்மை (3,2,2,1)
11.முடி நிறம் மாற்றிய ஆசான்? (3,5)
13.திசை தெரியாமல் முகவரி சொல்லத் தடுமாறு (3)
15.புதிய சாயம் வாங்க நேர்ந்தது – பழையன களைய (3)
16.அமோக முள்ளங்கி விளைச்சலில் புகழ்பெற்ற ஒரு புதினம் கிடைத்தது (2,2)
மேலிருந்து கீழ்:
1.பழமொழியின் முன்பாதி கனிந்து கிடக்கிறது (4)
2.சற்றே தவற விட்டிருந்தாலும் விடை கிடைத்திருக்காது; முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் (4)
3.கடற்கரையில் வழுவழுப்பாய் ஒரு பாறைத் துண்டு (5)
4.வேம்பு மணம் நீண்டு வீசியதால் புறப்பொருள் நூலான ஒரு அகப்பொருள் இலக்கியம் (6)
7.என்னுடன் பேசுபவர் என் தனித் தன்மையை மீறி முதலிடம் பிடித்து விடுகிறார் (4)
9.நதிக்கரைகளில் பிறந்ததாம் (5)
10.தமிழ்நாட்டு விமானம் (4)
11.தனக்கு வந்தால் தான் தெரியும் (4)
12.அடுத்ததைப் பார்த்த ஒன்பதின் அலறல் (4)
14.பொய்யா மொழி வெண்பா (3)

தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்

This gallery contains 1 photo.

கடந்த சில புதிர்களில் எளிமையாகுகிறேன் பேர்வழி என்று cryptic clues அதிகம் இடம் பெறவில்லை. ஆனாலும் எளிமைக்குத் தான் இப்போது வரவேற்பு அதிகம். சென்ற வாரக் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடைகள் இங்கே: சில விடைகளுக்கான விளக்கங்களைக் காண்போம். 1 – இ. வ. - வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி                        தத்துறு விளையாட்டாலோ தடமுளைப் … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 6

இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள். சில நேரடி கேள்விகளும் எளிய சொற்களும் இடம்பெறுகின்றன. ஒருசில சிலேடைகள் மற்றும் அறிவியல் தமிழ்ச் சொற்களும் இலவசம்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. பழந்தமிழ் டென்னிஸ் வீராங்கனை? (7)

4. அண்டத்தில் நாம் வசிக்கும் காலக்ஸி.  (4)

5. உயிர் காக்கும் உபகாரம் (3, 3)

6. குழந்தையும் தெய்வமும் தோன்றும் இடம்.  (4)

9. சுழலும் விளையாட்டுக் கருவி. (5)

11. கார்பன் – தமிழில் (2)

12. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு. (7)

14. பிளாஸ்டிக் – தமிழில் (3)

15. எப்படியோ இந்த கேள்விக்கான விடை வெளியே தெரிந்து விட்டது! (5)

16. பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் தலையெழுத்து? (2, 2)

மேலிருந்து கீழ்

1 புதுக்கவிதையின் பழைய பெயர் (6)

2. முடி திருத்தகத்தில் வரிசையாக ஒரே சந்ததியினர் (4)

3. திருமணம் ஆகாதவள் – பணக்காரி (3)

4. பயம் கொள்ளலாகாதவர் செய்வது (4)

7. இல்லாமை (4)

8. கடகடவென்று இதை நிரப்புங்கள் (8)

10. உப்பு விளையும் இடம். (5)

13. மங்கையர் செய்தது? (4)

11.கவி பாடும் கட்டுத் தறி வைத்திருந்த கவிஞன். (4)

தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்

This gallery contains 1 photo.

The nice thing about doing a crossword puzzle is, you know there is a solution - சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 5

இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. பொன்னியின் செல்வன் (5, 4)

5. கடவுள் மனிதனுக்கு சொன்னது (2)

6. மெய்மறந்த கைம்பெண் (3)

7. வெள்ளை ஒளி வானவில் வண்ணங்களாக மாறுதல் (6)

9. கடவுளுக்கு மனிதன் சொன்னது (6)

11. மேன்மை பொருந்தியவர் (2)

12. தேவையற்றதை

நீக்கு (2)

13. குறுகிய இடைவெளியில் அப்பாவி (3)

14. ஒட்டகத்தை ஓட்டியதும் எஞ்சிய மிருகம் (4)

16. கேரள தண்ணீர்?(4)

17. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)

மேலிருந்து கீழ்

1 ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து அறிதல் (5)

2. ஔவையார் தொண்டைமானுக்குச் செய்த அணி (9)

3. பூங்கொத்து (4)

4. புதிய தையலில் விரிசல் (4)

7. மேலாண்மை என்பதை இப்படியும் சொல்கிறார்கள் (5)

8. பொருத்தமற்ற, ஒருதலை காதல் (4)

9. மனிதன் மனிதனுக்கு சொன்னது (6)

10. பாட்டி காலத்தில் தொடங்கிய சித்திரக் கதை. (6)

15. பேரிளம்பெண் (3)

தமிழ் குறுக்கெழுத்து 4 – விடைகள்

This gallery contains 1 photo.

‘க்ளிக்’கியதற்கு நன்றி. எப்போதும் போலவே லோகேஷ் கலக்கிவிட்டார். அவர் அனுப்பிய விடைகளை இங்கே பதித்துள்ளேன். எளிமையான தமிழ் சொற்கள், அன்றாட வழக்குச் சொற்கள், சில பொது அறிவுச் செய்திகள், தமிழ் இலக்கணக் கூறுகள், அவ்வப்போது தோன்றும் (அறுவை) சிலேடைகள் என்று இந்த குறுக்கெழுத்து அமையும்படி முயற்சிக்கிறேன். இது பற்றி உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள். அடுத்த புதிரில் … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 4

 இன்று நண்பர்கள் தினமாமே… வாழ்த்துக்கள்!

இந்த வார தமிழ் குறுக்கெழுத்து இதோ. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும்  அனுப்பி வையுங்கள்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. 24 நிமிடங்கள்  (3)

2. பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் (4)

6. சொப்பன சுந்தரி மெய் மறந்து கிடக்கிறாள் (3, 3)

10. ஆழ்வார்கள்; இயேசுவின் அடியார்கள் (6)

11. நூறு ஆண்டுகளுக்கும் மேல் சென்னையில் வசிக்கும் வரலாற்றுச் சின்னம்! (4, 5)

13. நடுத்தெரு நாராயணன் எழுதும் இடம் (3)

14. தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)

16. ஆண் பெயர் கொண்ட நதி (8)

17. பூமியில் முக்கால் பங்கு (2)

மேலிருந்து கீழ்

2. கொங்கு நாட்டு வீரர். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடைப்பட்டவர். (3, 5)

3. தமிழ் இன்டர்நெட் (4)

4. ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு (2)

5. எதிரிகள் (4)

7. வடக்கிலும் தெற்கிலும் உண்டு, கிழக்கிலும் மேற்கிலும் இல்லை! (4)

9. இதை எழுதியவன், நேற்று வந்தவன், இவற்றுள் தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது __________ பெயர் (இலக்கணம்) (7)

11. போருக்குப் பின் வரும் என்பது நம்பிக்கை (3)

12. தமிழ் மந்திரி (5)

14. ஜீன்களால் சுமக்கப் படுவது, புதுக்கவிதையில் மீறப் படுவது (3)

15. கண்ணன் அவதரித்த வடமதுரை (3)

தமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள்

This gallery contains 1 photo.

மின்னஞ்சலில் விடைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. லோகேஷ் வழக்கம்போல் அதிக விடைகளை அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள். Grid அவ்ளோ professionalla இல்ல என்று கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி. அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன். முயற்சி செய்தவர்கள் இந்நேரம் வியங்கோள் வினைமுற்று, ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று எட்டாம் வகுப்பு grammar class-க்கு மீண்டும் சென்று … Continue reading