பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ், நிர்மலா ரகுராமன், திலிப் புஷ்பராஜன் தம்பதியர், மற்றும் சக்தி பாலன் ஆகியோர்.

இடமிருந்து வலம்:
2. பெண் சிசுக்களைக் காத்திட உன் சிந்தனை (கருத்து) வேண்டும் கருப்பு (கருத்த) அன்னையே (அம்மா)! (6) கருத்தம்மா
4 & 10. மாறுவேடமும் ஆள்மாறாட்டமும் செய்து ஓடிக்கொண்டிருக்கையில் அன்பு செலுத்த (காதலிக்க) வாய்ப்பு ஏது? (= நேரமில்லை) (5, 5) காதலிக்க நேரமில்லை
7. அழகு மலரும் அழைப்பு மணியும் உனக்காகத்தான். அணிந்திட வா (சூட வா) மலரே (பூவே)… (2, 5) பூவே பூச்சூடவா
மல்லிகை பந்தல் கிராமம். பூங்காவனத்தம்மாள் தன் பேத்திக்காகக் காத்திருக்கிறாள். இன்னும் எத்தனை நாள் ஆனாலும் அவளின் வருகைக்குக் காத்திருக்கிறது அந்த வீட்டின் அழைப்பு மணி. “பேத்தி என்றாலும் நீயும் என் தாய்” என்ற ஒற்றை வரி சொல்லும் பாட்டி-பேத்தி பாசம். இத்தனை இருந்தும் ‘தமிழ் மணம் குறைவு’ என்று விகடன் விமர்சனம் எழுதியிருந்தது வியப்பிற்குரியது.
9. இதைக் கட்ட நடுத்தரக் குடும்பம் பட்ட பாடு பாலுமகேந்திராவுக்குத் தெரியும் (2) வீடு
12. ராச பக்தி செய்த குழப்பத்தில் சிவாஜிக்கு நல்ல வரவேற்பு (5)
இது ஒரு பிறழ்மொழி (anagram). ராசபக்தி –> குழப்பம் = பராசக்தி (சிவாஜி கணேசனின் முதல் படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்தது)
13. அன்றைய தினம் (= அந்த நாள்) ஒரே திகில் (3, 2)
மேலிருந்து கீழ்:
1. உதிர்ந்த (உதிரி) மலர்களே (பூக்கள்) மகேந்திரனுக்கு மாலையாகி விட்டன (8)
2. டக்கான் ரக காரட் பொறியல் பிசைந்து தின்றதால் தலைக்கு மேல் (கரகாட்டம்) ஆட்டம்தான் (9)
இதுவும் ஒரு பிறழ்மொழி (anagram). டக்கான் ரக காரட் –> பிசைந்து பார்த்தால் —> கரகாட்டக்காரன்.
5 & 6. அண்ணனும் தம்பியும் (சகோதரர்கள்) ரொம்ப அதிசயம்தான் (அபூர்வம்) (4, 7) –> அபூர்வ சகோதரர்கள்
8. சுதந்திரம் கிடைக்கத் திரும்பவும் தலையை விடு (4)
தலை(யை) விடு –> திரும்பவும் => விடு தலை = விடுதலை
11. ஹேராயில் தரம் நடுவில் நான்கு தரம் குறைந்தபோதும் காந்தி என்ன சொல்லிவிடப் போகிறார்? (1,2)
ஹேராயில் தரம் —> நடுவில் நான்கு எழுத்துக்கள் குறைந்ததால் —> ஹேராயில் தரம் = ஹேராம் (காந்தி அடிக்கடி சொன்னது)
வலமிருந்து இடம்:
3. காவேரியைத் தேடி கிருஷ்ணா கடந்து சென்ற மற்றொரு பெரிய (மகா) ஆறு (நதி) (4) மகாநதி
தன் மகள் காவேரியைத் தேடி கிருஷ்ணா (கமல்) சென்ற படம் மகாநதி.
கீழிருந்து மேல்:
14. ஓர் இரவில் குற்றவாளி காவலாளி ஆனதைத் திரும்பவும் நினைத்துத் திகை (4)
திகை –> திரும்பவும் –> கைதி (ஓர் இரவில் நடப்பதாக அமைந்த திரைப்படம்).
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்.