ஆடிப் பெருக்கு


கி.பி. 968 ஆடி மாதம் 18-ஆம் நாள்: புறப்பட்டு விட்டேன். வீரநாராயண ஏரிக் கரையில் சென்று கொண்டிருக்கிறேன். அடேயப்பா! இது ஏரி அல்ல; கடல். உங்களிடம் மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஆதித்த கரிகாலர் கொடுத்த ஓலையை எடுத்துச் செல்கிறேன். சரி சரி, இந்த ஏரியில் மொத்தம் 74 கணவாய்கள் இருக்கிறதாம். கணவாய் எண் எழுபதைக் கடந்து விட்டேன்.