ஆழ்வார்க்கடியான்


நடந்த குழப்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்த வீர வைஷ்ணவன் பெயர் ஆழ்வார்க்கடியான். கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டான். எனக்கே அழைப்பிதழ் இல்லை என்று அறிந்ததும் என்னை விண்ணகரக் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். வீரநாராயணன் என்றும் அழைக்கப்பட்ட பராந்தக சோழன் வடக்கிலிருந்து படையெடுத்து வருவோரை எதிர்க்க தன் மகன் ராசாதித்தன் தலைமையில் பெரும் படையொன்றைத் திருமுனைப்பாடியில் நிறுத்தி வைத்திருந்தான். வேலையற்று இருந்த படைவீரர்களைக் கொண்டு, கடலில் வீணே கலக்கும் கொள்ளிடம் என்ற வட காவிரி நதி நீரைத் தேக்கி வைக்க மாபெரும் ‘வீர நாராயண ஏரியை’ உருவாக்கினான்.அதன் கரையில் தான் விண்ணகரக் கோயில் இருக்கிறது.அங்கு சென்றதும் ஆழ்வார்க்கடியான் பல பாசுரங்களைப் பாடினான். உண்மையிலேயே அவன்… இல்லை இல்லை… அவர் ஒரு பண்டிய சிகாமணி. கடைசியாக, நேற்று சிவிகையில் பார்த்தேனே ஒரு பெண், அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். இது என்ன புது வம்பு! ஒரு கணம் கூட அங்கே நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி கடம்பூர் மாளிகைக்கு விரைந்தேன்.