ரகசிய ஆலோசனை


ரகசிய ஆலோசனையில் பழுவேட்டரையர் சொன்னார்: “சுந்தர சோழ மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவருக்குப் பிறகு பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்”. ஆதித்த கரிகாலருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் கட்டியாகிவிட்டதே என்று யாரோ சொல்ல, “தசரதர் கூட ராமருக்குப் பட்டம் கட்டும் முன் மந்திரிசபையில் ஆலோசனை நடத்தினார். இங்கே அப்படியா நடந்தது? இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வம்சத்தினர் நாம். யாரையுமே கருத்து கூட கேட்கவில்லையே! பல போர்களில் அனுபவம் பெற்றவர்களை அல்லவா படை தளபதியாக நியமிக்க வேண்டும். நம் நாட்டிலோ வடக்கில் தன் மூத்த புதல்வரையும் தெற்கில் இளையவரையும் நியமித்திருக்கிறார் அரசர்.

மூத்தவர் வடதிசை நோக்கி படையெடுக்காமல் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். அட அது பரவாயில்லை. ஈழத்தில் போர் புரியச் சென்ற அருள்மொழி வர்மர் நம் படை வீரர்களுக்கு வேண்டிய உணவுகளை இங்கிருந்து அனுப்பச் சொல்கிறார்! கேட்டால், நமக்கும் ஈழத்து அரசுடன் தான் போர். அந்த மக்களுடன் அல்ல. அரசகுலத்தை வென்று பிறகு மக்களின் விருப்பத்துடன் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

இந்த ஆண்டு பத்து தடவை பல கப்பல்களில் உணவுப் பொருட்களை நான் அனுப்பி இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கெல்லாம் அதிக வரி விதித்தேன். இப்படி ஒரு இறை அதிகாரியாக இருந்து என்ன கிழித்து விடப் போகிறேன்? சோழ நாட்டின் நலனுக்காகப் பொறுத்திருக்கிறேன். இல்லையேல் சொந்த ஊருக்குப் போய்த் தொலைந்திருப்பேன்” என்றார்.

ஆதித்தர் தன் பொன் மாளிகையில் தங்கியிருக்க வேண்டி மன்னருக்குக் கடிதம் எழுதியதாகக் கேள்விப்பட்ட சிலர் “மகாராஜா காஞ்சிக்குப் போகிறாரா?” என்றார்கள். “கவலைப் படாதீர்கள். என் தம்பி சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் தஞ்சை கோட்டையில் யாரும் நுழைய முடியாது. அரசரைச் சந்திக்கவும் முடியாது. இது வரை இரண்டு மூன்று முறை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்” என்றார் பழுவேட்டரையர்.

என்னிடம் இருந்த ஓலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s