ஒரு சிறு முயற்சி.
‘ஒரு விலங்கு’, ‘ஒரு நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா?
எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். “என்கீ டமில் அவ்ளோவா பட்க தெர்யாது” என்பவர்கள் இங்கே சென்று பாருங்கள்.
1. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!
3. செலவெல்லாம் போக எஞ்சியது இது தான்.
6. இலங்கை நகரத்து இசைக்கருவி.
9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது.
10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல்.
11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன.
12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம்.
15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன்.
16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்?
17. திருக்குறளின் கம்பீரம்!
மேலிருந்து கீழ்:
1. இவரும் ஓட்டுனர் தான்!
2. காதலித்தால் வரும் என்கிறார்கள்.
4. அமுது, நிலவு, உயிர்…
5. தீ மூட்டிய ஆபரணம்?
6. கணியன் பூங்குன்றனார் சொன்னது
7. பேருந்தில் சென்ற மாமல்லன்
8. தனம் தரும், கல்வி தரும்… நாயகியின் துதிப் பாடல்
9. பாவகை – ஔவை விநாயகருக்குப் பாடியது
12. பழந்தமிழின் புதிய பெயர்!
13. எரிக்கும் உறவு?
14. இதைத் தாண்டி ஒன்றும் இல்லை!
(விடைகள் நாளை)
Pls do wait until I send you my answers. I think you haven’t given a “clue” for 16 across! Check..
LikeLike
My bad! I’ve added it now. Thanks for pointing it out, Logesh!
LikeLike
மேலிருந்து கீழில், 8ம் 9ம் மாறி இருக்கின்றன என்று நினைக்கிறேன்!
விடைகளை அனுப்புகிறேன்..
LikeLike
இது ஒரு மிகவும் இனிமையான பயிற்சி! சிறு வயதில் இருந்தே எனக்கு குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஒரு ஆர்வம். வாரமலரில் ஆரம்பித்தது! தீபாவளி பொங்கல் என்றால் ஒரு பக்கத்திற்கு நூற்றுக்கும் மேலான வினாக்களோடு வந்துவிடும்… எனக்கு அது மட்டும் தான் பிழைப்பே!!
அதன் பிறகு கல்லூரிக்கு வந்தபின் “ஹின்டு”-வில் ஒரு ஆங்கிலக் குறுக்கெழுத்து பார்த்து பதில் சொல்ல முயற்சித்தேன்! இதுவரை ஒன்றைக் கூட முடித்ததில்லை (ஒரு விடையைக் கூட கண்டதில்லை). உன்னுடைய ஆங்கிலப் போட்டியைப் பார்த்து ஆதங்கம் கொண்டேன்…. என்னைப் போன்ற ஆட்களுக்காகவே இதை செய்திருக்கிறாய்… மிக்க நன்றி… சித்தார்த்தன் கதையை நினைவு கூர்ந்தேன்… “எந்திரன்” பார்த்து சிரித்துக் கொண்டேன்… “அதிகாரம்” என் நண்பனிடம் தெரிந்து கொண்டேன், “பந்தம்” சிலேடை பார்த்து வியந்தேன்… மொத்தத்தில் இது ஒரு மிகச் சிறந்த போட்டி,
மிக்க நன்றி விஜய்!!!
LikeLike
இதோ பதில்கள்:
இ. வ.
1. விகடகவி
3. மீதம்
6. யாழ்
9. அம்பு
10. தொல்காப்பியம்
11. ஊர்வன
12. சென்னை
15. எந்திரன்
16. மொட்டை (good one :))
17. அதிகாரம்
மே. கீ.
1. விமானி
2. கவிதை
4. தமிழ்
5. சிலம்பு
6. யாதும் ஊரே
7. பல்லவன்
8 (9). அகவல்
9 (8). அபிராமி அந்தாதி
12. செம்மொழி
13. பந்தம்
14. மரணம்
LikeLike
That definitely gave me a great satisfaction!!
Thanks again, fella!! Looking forward to similar exercises in the future.
you may have a look at “radiospathy.blogspot.com”. The guy is a die-hard fan of Ilayaraja, and he can not agree more about your “இரைச்சலுக்கும் இளையராஜா இசைக்கும் உள்ள வித்தியாசம்”!!
LikeLike
Thanks for your comments, Logesh! Keep reading. I’ll definitely post another puzzle soon. With my holidays coming to an end this week, I’m thinking of posting one this weekend.
LikeLike
nandri…..
LikeLike
இடமிருந்த வலம்
1. விகடகவி
3. முதல்
6.யாழ்
9. அம்பு
10. தொல்காப்பியம்
11. ஊர்வன
15.எந்திரன்
16. முட்டு
17. அதிகாரம்
மேலிருந்து கீழ்
1. விமானி
2. கவிதை
4. தமிழ்
5. சிலம்பு
6. யாதும்ஊரே
7. பல்லவன்
8. அபிராமிஅந்தாதி
9. அகவல்
12. தொன்முறை
13. பந்தம்
14. அரதம்
LikeLike
நன்றி! விடைகளை சரிபார்க்க: https://ilakyaa.wordpress.com/2010/08/06/தமிழ்-குறுக்கெழுத்து-1-வி/
LikeLike