அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும்.
இடமிருந்து வலம்
1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4)
3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5)
6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2)
7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3)
8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3)
9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)
10. யதார்த்தத்துடன் குடுமியையும் இழந்து விட்டான் சோழியன் (3)
11. வானுக்குப் போக வாகனம் வந்து விட்டது (5)
13. விருத்தத்திற்கு ஒரு கம்பன்… வெண்பாவுக்கு _______ (5)
14. உருட்டியதால் சுருங்கிய பட்டாசுக் கடை (3)
17. மனைவியர் குலம்! (4)
18. பெண்கள் பருவத்தில் முதுமையிலும் இளமை! (6)
மேலிருந்து கீழ்
1. காலடியில் நசுங்கிய ராணுவம்? (5)
2. ஊரே பூட்டிக் கிடக்கிறது! (6)
3. மரத்தில் இருந்ததால் மூக்கடி பட்ட பாம்பு (4,4)
4. விண்ணப்பம் எழுதிய முதல் மனிதன் (2)
5. தமிழ் தாத்தா தேடியது (6)
7. மன்னரின் தலையில் தண்ணீர் கலன்! (4)
10. சோம்பேறி ஆகச் சொல்லும் வாசனைப் பொருள் (3)
12. வழித் தோன்றல்கள் (4)
15. எடை மிகுந்த நீதிபதி? (3)
16. சென்னையின் மூலையில் ஒரு வள்ளல்! (2)
இந்த வாட்டி கொஞ்சம் கஷ்டமாப் போச்சு… 😦
இன்னும் முடிக்கல… நெறைய தெரியல…
LikeLike
🙂 பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்தவை தான். தொடர்ந்து முயற்சிக்கவும்!
LikeLike
Pingback: தமிழ் குறுக்கெழுத்து – 3 « இணைய பயணம்
Pingback: தமிழ் குறுக்கெழுத்து – 3 « இணைய பயணம்
2மற்றும் 17 ன் விடை என்ன
LikeLike
2 மற்றும் 17 ன் விடை என்ன
LikeLike
விடைகள் இங்கே: https://ilakyaa.com/2010/08/20/தமிழ்-குறுக்கெழுத்து-2-வி/
LikeLike