படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்


The nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim).

வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்தல் போல.

ஐந்தாவது குறுக்கெழுத்து கொஞ்சம் கடினமாகவே இருந்தது என்று லோகேஷ் முதல் நாளே சொல்லிவிட்டார். ஆனால் மனிதர் இந்த வாரமும் பெரும்பாலான விடைகளை வழங்கி விட்டார்.

சில விடைகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

1 – மே. கீழ். – அனைத்தையும் ஆராய்ந்து ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டு தெளிவதை அறிவியல் என்று சொல்கிறோம் – அறிவை முதன்மையாக வைத்து முயற்சிப்பதால்.

8 – மே. கீழ். – பொருந்தாக் காமம் என்பதைக் கைக்கிளை என்று சங்க காலத்தில் வழங்கினர்.

17 – இ. வ. – எனக்குப் பிடித்த புதிர் இது. ராமாயணத்தில் ஜனகனின் வில் உடைந்தது ராமனின் பலத்தால். ஒளிச்சிதறலின் போது ஒளியின் அலைநீளம் மாறுகிறது என்று கண்டரிந்தமைக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு நோபெல் பரிசு கிடைத்தது. இவை இரண்டுமே ராமன் விளைவு தான். ஒப்புக்கொள்கிறீர்களா?

உங்கள் எண்ணங்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். கீழே மறுமொழி (Leave a comment) க்ளிக் செய்து வசை பாடுங்கள். அல்லது ‘டேய் மச்சான், இங்க ஒருத்தன் சிக்கிருக்காண்டா’ என்று உங்கள் நண்பர்களுக்கு இதைப் பற்றி சொல்ல facebook, twitter, google plus ஆகியவற்றுக்கான பொத்தான்களைப் (Buttons) பயன்படுத்துங்கள்.

அடுத்த புதிரில் சந்திப்போம்.

One comment on “தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்

  1. விஜய், இது சூப்பர் — அறிவியல்? என்னால நெனச்சுக்கூட பாக்க முடியல 🙂
    கைக்கிளை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு, ஆனா, என்னால கண்டிப்பா சொல்லியிருக்க முடியாது.
    வஞ்சப்புகழ்ச்சியும், அருள்மொழியும் நான் கூகுள் மூலமா தான் கண்டுபுடிச்சேன்…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s