இலக்யா குறுக்கெழுத்து 11


மகாமகம் ஆகப் போகிறது, போன குறுக்கெழுத்துப் புதிர் பதித்து. தெரிந்த கொஞ்சம் யுத்திகளும் மறந்து விட்டது. Symmetry மாறாமல், இரண்டெழுத்துச் சொற்கள் வராமல், எந்த சொல்லும் தனிமையில் தொங்காமல் எப்படியோ ஒரு புதிர் அமைத்துள்ளேன். ஓரிரு அருஞ்சொற்கள், பிறழ்மொழிகள் (anagrams), என்னைக் கொல்லத் தூண்டும் கடி ஜோக்குகள் (!) என்று உங்கள் நேரத்தைக் கடன் வாங்க என்னுடைய இன்னொரு முயற்சி. விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com இடமிருந்து வலம் 1. கேள்விச் செல்வம் வந்தடையும் பாதை? (2,2) 3. போர் பயிற்சி முடிக்க வாத்து பட்ட பாட்டை என்ன சொல்ல? (4) 6. தறிகெட்டு ஆடடி வேடம் கலைந்திட (3) 7. தட்பவெப்பம் தெரிந்து கொள்ள நிபுணரின் தன்னிலை வாக்கை அறி, தன்னை நீக்கி (3,4) 9. தமிழ் கடவுளின் திருவடியில் விடை தேடு (3,2)xwrd11 10. எப்போதும் பார்வையில் படும்படி அமர் (2,2,2) 14. நய வஞ்சகன் சூழ்ச்சி செய்ய வந்தான் – கரிய படம் புவியரசன் தலையும் சேர (4,3) 16. பெண்ணாம் பெரியதாம் (3) 17. ஊர்களை வட்டமிடு லாவகமாக (4) 18. கரையான்களுக்குப் பிடித்த இலக்கியம்? (2,2) மேலிருந்து கீழ் 1. மங்கள்யான் தோஷம்? (4) 2. அடர்ந்த, வானுயர்ந்த சோலை (3) 3. குரைக்கும் நாய் கடிக்க வராது என்றால் குறைக்கத நாய் …… (4,3) 4. பேச்சு வழக்கில் குடிக்கூலி கேள் (3,1) 5. மழை நீர் சொட்ட கொஞ்சமே கொஞ்சம் மது போதும் (4) 6. பனிரெண்டு ஆக இத்தனை முறை நதியில் அமர் (3) 8. தமிழர் தமிழை அதிகம் பயன்படுத்தாதது பாரதிதாசனின் உவமை நஞ்சாகி விடும் என்பதாலா? (7) 10. நேரம் கடத்த அரட்டை அடி (2,2) 11. ஆறுமுகம் திரும்பிய போதும் எண்ணிக்கை மாறவில்லை (4) 12. இடது புறம் (3) 13. அறுபத்து நான்கு, பெயரெச்சம் (4) 15. சிட்டுக் குருவியின் முட்டை போன்ற பூக்களைக் கொண்ட மரம் (3)

Advertisements

One comment on “இலக்யா குறுக்கெழுத்து 11

  1. இடமிருந்து வலம்:

    1. செவி வழி
    3. கவாத்து
    6. ஆடிட
    7. வானிலை அறிக்கை
    9. முருக தாளுள்
    10. கண் முன் இரு
    14. கபடம் புரிய
    16. மாதாம்
    17. சுற்றுலா
    18. புனை வலை

    மேலிருந்து கீழ்:

    1. செவ்வாய்
    2. வயலை / வசலை
    3. கடிக்க வரும்
    4. வாடகை தா
    5. துளிகள்
    6. ஆறிரு
    8. அமுதென்பதாலா
    10. கதை பேசு
    11. முகமாறு
    12. இடம்
    13. ஆயகலை
    15. புன்னை
    .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s