குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


இன்றைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கணிதம், அறிவியல் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற ‘முக்கியமான’ பாடங்களையும் படிப்பதால் தமிழ் போன்ற ‘முக்கியமில்லாத’ பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் அவர்களின் பொன்னான நேரத்தைக் கடன் வாங்கி அதில் சில தமிழ் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லலாம். ஒரு வேளை அதன் மூலம் சிறிது தமிழ் ஆர்வம் அவர்களுக்கு வரலாம். அதற்கான் சிறு முயற்சி தான் இது. சிறிய புதிர், சில எளிய சொற்கள், கொஞ்சம் சிலேடைகள் என்று என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.  கட்டங்களுக்குள் தமிழில் தட்டச்சு செய்யலாம். சரியான எழுத்தை உள்ளிட்டால் அந்த கட்டம் பச்சை நிறமாகும். இது வேலை செய்யாவிட்டால் வழக்கம் போல் ப்ரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கதிரவனும் தேசத் தந்தையும் சேர்ந்த பூ (6)

3. ஆடி மாதம் 18-ஆம் நாள் நடனமாடிக் கொண்டே வீட்டைச் சுத்தம் செய் (7)

5. மரங்கள் நட்டு நீர் ஊற்றியதால் கிடைத்த பச்சை தன்மை (3)

7. வெயில் விரும்பும் பழம் – திருடி (3)

மேலிருந்து கீழ்:

2. அகர முதல’ என்று துவங்கும் நூல் (6)

3. துவக்கம் (5)

4. பெரிய இங்க் பாட்டில் வாங்கிய கர்வம் (3)

6. ப்ரவுன் நிற உடல், கருப்பு நிறத் தலை, வால் நுனியில் சிறிது இளம் வெள்ளை நிறம். என்ன பறவை இது?

7. பழம் –  _____ இருப்பக் காய் கவர்ந்தற்று (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

Advertisements

2 comments on “குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்

  1. *பின்னூ ட்ட ம் செல்ல வில்லை! wordpress கடவு ச் சொல் மறந்து விட்டேன்!*

    * 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்*:

    சிறந்த முயற்சி. தொடர வாழ்த்துக்கள்! இலக்கம் 3 தவறான கட்ட்டத்ல்தில்
    இருக்கின் றது. 3 மேலிருந்து கீழ் குறிப்பு காணவில்லை!
    சூரியகாந்தி ஆடிப்பெருக்கு கள்ளி; திருக்குறள் பெருமை மைனா கனி

    2016-11-14 16:02 GMT-05:00 இணைய பயணம் :

    > vijay posted: “இன்றைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில்
    > உள்ளனர். கணிதம், அறிவியல் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற ‘முக்கியமான’
    > பாடங்களையும் படிப்பதால் தமிழ் போன்ற ‘முக்கியமில்லாத’ பாடங்களைக் கண்டு
    > கொள்வதில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஒரு 5 முதல் 10 ”
    >

    • தங்கள் கருத்துக்கு நன்றி. பிழைகளைத் திருத்தியிருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தை ஒரு வாரம் கழித்து (இன்னும் சிலர் விடைகளை அனுப்பிய பிறகு) பதிவு செய்கிறேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s