இலக்யா குறுக்கெழுத்து 20-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:
இடமிருந்து வலம்
1. ஆகாயத்தின் எல்லையை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவான் (4)
3. மாவுப் பொருளுக்கு வண்ணம் கொடு (1,1)
7. ஒரு மதிப்பெண் கூட இழக்கவில்லை (5, 2)
9. நெற்றிப் பொட்டு (4)
10. உரக்கலவை சில களைகளையும் நீக்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி (3)
11. தான் நெற்றியில் சூடிய அணிகலனின் பெருமையை ஊரெல்லாம் முரசு அடித்துச் சொல்லாத குறைதான் (6)
12. சினிமா சினிமா என்ற பிதற்றல் தெளிவதற்குள் பங்குனியே வந்து விடுகிறது (2)
15. பாறை இடுக்கினுள் சற்றே உற்றுப் பார்த்தால் ஒரு பெரும் படையே தங்கியிருக்கிறது (3)
16. கம்பி திருடும் கள்வனைப் பார்த்ததும் கம்மென்று தப்பித்து வந்திடு (5)
17. ஓலைச் சுவடியில் எழுதும் பேனா? (2)
மேலிருந்து கீழ்
1. மொத்த விலை கொடுத்து சரடு வாங்கிக் கோர்த்தால் சங்க இலக்கிய புத்தகம் ஒன்று கிடைக்கிறது (2, 2)
2. முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு வந்த இல்லற வாட்டம் பந்த சொந்தங்களையும் குழப்பி, அறம் அறுக, பறக்க முடியாத பருவமாய் ஆக்கி விட்டது (5, 4)
4. மனதார கைகளுக்குள் பார்த்தால் விண்மீன் தெரியும் (3)
5. கூட்டணி கட்சிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (3, 5)
6. வசீகரத்தால் அவளை மயக்கம் கொள்ளச் செய் (3,1)
8. நூல் அதிகம் சேர்ந்து விட்டதனால் தினம் போய் படிப்பது நலம் (4)
11. ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் சின்ன வித்தியாசம் தான் (4)
13. மிகச்சிறு வாணிபத்தில் பணம் ஆறாக ஓடுகிறது (4)
14. எடையைக் கொண்டு வெற்றிடம் நிரப்பு (2)
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
மேலிருந்து கீழ் : 1 – தொகை நூல், 2 – வாலறுந்த பட்டம், 4 – தாரகை, 5 – தொகுதி உடன்பாடு, 6 – மறுக வை, 8 – நூலகம், 11 – தளபதி, 13 – சிறுவாணி, 14 – நிறை. இடமிருந்து வலம் : 1 – தொடுவான், 3 – மைதா, 7-நூற்றுக்கு நூறு, 9- திலகம், 10-உகவை, 11 – தம்பட்டம், 12-மாசி, 15-பாசறை, 16-திரும்பிடு, 17-ஆணி.
LikeLike
நல்வரவு! அனைத்து விடைகளும் சரி. வாழ்த்துகள்.
LikeLike