–
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.
உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.
‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.
–
இடமிருந்து வலம்
2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா? (3)
5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)
6. நண்பா! சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்! (4)
7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)
8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)
10. மரமாய் நின்று பரவு (2,2)
11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)
13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது! (4)
17. _____ முத்தல்லவோ! (4)
18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்? (4)
20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)
வலமிருந்து இடம்
16. ராமனின் தோழன் (3)
–
மேலிருந்து கீழ்
1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)
2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)
3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)
4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)
8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)
9. குருதிக் குழாய் (3)
12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)
13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு! (4)
கீழிருந்து மேல்
14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)
15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)
19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)
21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)
–

கு. 2. வீரமா 5. திருமதி 6. பாசனம் 7. கந்த 8. நெடு நாள் 10. கிளை
விடு 11. துரும்பு 13. போகிறது 16. ன்ககு. 17. முத்தான 18. மாசடைய
20. கை மாறு
நெ. 1. கருவாடு 2. வீதிகள் 3. மாபாதகி 4. தேனருவி 8. நெடிது 9.
நாளம் 12. புன்னகை 13. போகுமாறு 14. கிள்ளை 15. துண்டு 19. காத்திரு
15. ராமனின் தோழன் (3) 16. கு என்றிருக்க வேண்டும். 21 கீழிருந்து மேல்
குறிப்பு?
LikeLike