பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில் ‘போர் அடித்து‘ அமர்ந்திருப்பீர்கள். குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் இருப்பவர்கள் இதை முயற்சிக்கலாம். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.
பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 9 x 9 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.
விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.
இடமிருந்து வலம்:
1. தேசிய பறவை வண்டி ஏறி வருகிறது (3, 4)
4. கடற்கரையில் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது இந்த channel (5)
6. அழகு குறைந்தபோதும் அறிவழகன் மூளைக்காரன் (3)
7. குழு அமைத்து உடுத்திக்கொள் (2)
9. சோப்பு கொண்டு அடிக்கடி இப்படிச் செய்தல் கிருமிகளை நீக்கும் (1,5)
11. சிலம்பு தேய்ந்து சிலம்பரசன் ஆகிவிட்டது (3)
13. பொருளின் மதிப்பு (2)
14. படத்தில் இருக்கும் பூச்சியின் பெயர் (3)
மேலிருந்து கீழ்:
1. ஊட்டியை இப்படியும் பெருமையாகச் சொல்வார்கள் (5,3)
2. வெயிலா மழையா புயலா என்று நமக்கு இப்படிச் சொல்வார்கள் (3, 4)
3. துணியையும் காகிதத்தையும் வெட்டப் பயன்படும் (7)
5. மாமிசம் உண்ணாதவர்களை இப்படியும் சொல்லலாம் (3)
8. தமிழில் 247 இருக்கிறது (4)
10. இளைய சகோதரன் (3)
12. உலகம் (2)
விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.