பொன்னியின் செல்வன் படிக்காதவர்களும் பிடிக்காதவர்களும் (யாராவது இருந்தால்) புதிர் 13-ஐ விரும்பியிருக்க மாட்டார்கள். அதே வேளை தமிழ் ‘தி இந்து’வில் இந்த தளத்தைப் பற்றிய பதிவு ‘நெட்டெழுத்து’ பகுதியில் வந்தமையால் பல புதிய நண்பர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது (அந்த பதிவை இங்கே படிக்கலாம்). மீண்டும் ஒரு ‘பொதுவான’ குறுக்கெழுத்துப் புதிர் இதோ. சில நேரடி குறிப்புகள், சில பொது அறிவு குறிப்புகள், சில பிறழ்மொழிகள்… தமிழில் கலக்குங்கள்.
விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com
இடமிருந்து வலம்
1. சேர சோழ பாண்டியர் பற்றி 2700 பாடல்கள் – அனைத்தும் கிடைக்கவில்லை, ஆனால் தொகை மாறவில்லை (7)
4. பேச்சு வாக்கில் காய்ந்து முற்றுப் போலியான மருதாணி (4)
6. வடமொழி மேன்மையைப் பறித்த போதிலும் பெயரில் இவள் நாயகி (2)
8. இனி என்ன செய்வது என்பதை ஒரு மார்க்கமாகக் கேள் (2,3)
10. என்ன தைரியம் – எல்லோரும் பார்த்திருக்கையில் ஆடை மீது கை வைக்க (5)
11. மு. கருணாநிதி துவக்கி வைத்த இன்ப வெளிப்பாடு (7)
14. சூரிய உதயம் காட்டும் பருவப் பெண்? (3)
15. கதை சொல்லி ஆடும் நடனம் (4)
17. ஶ்ரீரங்கம் ரங்கராஜன் (3)
19. தேனீக்கள் தந்ததல்லடீ, இது வேறு (3)
20. தீய்ந்தாலும் சுவையான படிவு (4)
22. இறுதியாகவே நடந்த குழப்பத்தில் முடி வேக வா (5)
24. வானிலிருந்து அப்பம் வேண்டி எழுதிய கடிதம் (6)
25. இந்திய ஏவுகணை மனிதருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தரலாம் (6)
மேலிருந்து கீழ்
1. முழுக்க முழுக்க போதையில் எரிந்ததால் ளகர மயக்கத்தில் அணைந்த்த தீபம் (2,2,4)
2. மதுக்கடைகளை மூடினாலும் தொந்தரவு பல (3,2 அல்லது 5)
3. செய்து பாராளுமன்றத்தின் அழகைக் கெடுக்கும் அமளி (3)
4. கருஞ்சாயக் கண்? (3)
5. பாரதி அழைத்த குட்டிப் பறவையே (6,3)
6. இஞ்சி இடுப்பழகன் (6)
11. முதுமையின் இருப்பிடம், சுருக்கெழுத்தில் (4)
12. விருது (3)
13. சுப்பு ரத்தின தாசன் (3)
16. அண்மையில் ட்விட்டரில் தமிழர் கீச்சி அசத்திய வாழ்த்து (3,3)
18. பாரதி (4)
19. மற்றதைப் படிக்கும் அதே வாரம் இந்த சைவப் பதிகங்களையும் படிக்க முயன்றேன் (4)
22. சேலைத் தலைப்புக்கும் முன்னால் வந்து (3)
23. யானை (3)