2084: கால மயக்கம் – சிறுகதை


கதை எழுதுவது எளிதாகத் தோன்றினாலும் எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியும் அதில் எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன என்று. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ படிக்கும் போது “இவ்வளவு எளிதா!” என்று தோன்றும். ‘கயிற்றரவு’ அல்லது ‘கபாடபுரம்’ படிக்கும் போது “இதில் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றனவா” என்று தோன்றும்.

என் மனம் கவர்ந்த எழுத்துக்களில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ மற்றும் ‘Animal Farm’ ஆகியன அடங்கும். அதே போல, H. G. Wells எழுதிய Time Machine என்ற அறிவியல் புனைவு கதையும் பிடிக்கும்.

இத்தகைய புலிகளைப் பார்த்து நானும் போட்டுக் கொண்ட சூடுதான் ‘2084: கால மயக்கம்’ என்ற பிறழுலக புனைவுச் சிறுகதை.

நண்பர்கள் பலரது மத, அரசியல் கருத்துகளுக்கு இது எதிரானதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு ஆனந்தம் தருவதாகக் கூட இருக்கலாம். முற்றிலும் படிக்கவே லாயக்கற்றதாக இருக்காது என்று நம்புகிறேன்.

இப்போது Kindle eBook வடிவில் கிடைக்கிறது. 15 நிமிடங்களில் படித்து விடலாம். படித்தால் உங்கள் மதிப்பீடு (rating) மற்றும் கருத்துக்களையும் Kindle app மூலம் பகிரவும்.

அரைத்த மாவையே அரைப்பதாகத் தோன்றினாலும் கதை மாவுக்கடையில் அடி வாங்கி மாவுக்கட்டு போடும் அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

பதிவிறக்க: