தெண்டுல்கர் நூறாவது சதம் அடித்த பின்பும் பத்தாவது குறுக்கெழுத்து கூட வரவில்லை என்றால் அவருக்கு என்ன மரியாதை? எல்லா கட்டங்களையும் நிரப்பி நீங்களும் சதம் அடியுங்கள்.
பவுண்டரி, கிளீன் போல்ட், அப்பீல், எதுவாகினும்:
மின்னஞ்சல் வெறுப்பவர்கள் மறுமொழி பகுதியில் விடை சொல்லுங்கள்.
இடமிருந்து வலம்:
1. மிளகாயால் நாக்கு எரிந்து அலறினாலும் இதுதான் உணவு (4)
3. வாழ்வா-சாவா போராட்டத்தின் இறுதியில் மனைவியின் பிழைப்பு (6)
5. அடித்துப் பிடித்து உதைத்து எறிந்து அல்லோலகல்லோலப் படுத்து (4)
6. நிலாக் காதலன், நிலாக் காதலி (6)
8. மறுபடியும் மறுபடியும் தைரியமாய் வருகிறேன் – ஆணவத்தில் (3)
10. யதார்த்தம், பண்பு, தன்மை (4)
13. இந்த மாங்கல்யம் நிலைக்க ஐரோப்பா செல்ல வேண்டும் (4)
14. பாசாங்கு செய், பின்பு கரம் காட்டு (3)
17. நியாயம் சொல்பவர் (6)
18. பெயரால் வந்த பெருந்துன்பம் (4)
19. தாத்தாவுக்கு நான் பெரும் பாசத்துடன் எழுதிக் கொண்டது (6)
20. ஆதி மனிதனின் வீடு? (2,2)
மேலிருந்து கீழ்:
1. யாரையும் மிரட்டிடத் தேவையான அடியாட்களின் எண்ணிக்கை (5)
2. வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)
3. தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)
4. கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)
7. மாற்றம் (3)
9. அரைத்துத் தள்ளு (2)
11. திரைப்படத் தலைவன் (6)
12. தலைக்கு மேல் வேலையை உடனே நிறைவு செய் (2)
13. இதற்கு அப்பால் நீங்கள் மரியாதை இழக்கிறீர்கள்! (2,1)
14. பட்டணத்து ஆகாயம் நோக்கி இடம்பெயர்வான் (5)
15. மூன்றாம் நபர் போன பின்பு கைநீட்டி இலக்கண சுத்தமாய்ப் பேசு (5)
16. விண்ணின்று விழுவது (4)