பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. குறுக்கும் நெடுக்குமாக யோசித்து விடைகளை எழுதித் தள்ளுங்கள் – மின்னஞ்சலில்.
கைகுலுக்க, காலை வாரிவிட, கருத்து சொல்ல, கடிந்துரைக்க:
மின்னஞ்சல் வெறுப்பவர்கள் மறுமொழி பகுதியில் விடை சொல்லுங்கள்.
இடமிருந்து வலம்:
1. ஆங்கில முதலெழுத்தின் எதிர்பாராத இடப்பெயர்ச்சி (5)
3. வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)
4. நாயாய் நகைச்சுவை செய் (2)
9. இதுவும் பழம்பொருள் காப்பகமே (3)
10. பாடியவர்க்கும் கேட்டவருக்கும் நாட்டுப்பற்று என்ற மா வரம் தந்தே வெள்ளையரை விரட்டச் செய்த கீதம் (3,4)
11. தாய் _______ வணக்கம் – திரும்பியிருக்கிறது (3)
12. பாற்கடல் தந்த திரவத்தினும் தித்திக்கும் தமிழ் (6,3)
16. பாடல் பேரழகி (3)
17. அரவு முடி வசதியாக கையில் சிக்கிட, தியாக குணம் நீக்கி நிறைவேற்றிய தீர்மானம் (4,3)
18. முதல் உணவு சீரணம் ஆகாததால் குடலில் விளைந்த புண் (3)
19. அதிகமாக (2)
20. பயத்தில் பெயர் மறந்த பேசும் பறவை (2)
21. இந்திரா காந்தி எழுதிய புதிரில் எழுத்துக்களுக்குப் போதைய இடமில்லை
மேலிருந்து கீழ்:
1. ஏன் கவலை என்றெண்ணாது படித்ததால் விரல் போனது தான் மிச்சம் (5)
2. மேல் தளம் (2)
3. நன்றியுடன் நுகர்தல் (4)
5. சிறைசென்று திரும்பிய மகளைத் தந்தை இப்படித் தான் கொஞ்சி வரவேற்றிருக்க வேண்டும் (3,5)
6. முட்டாள் மண்டையில் ஆனந்த பூமி (4)
7. பாரதியார் ஆசிரியராய்ப் பணியாற்றிய ஓர் நாளிதழ் (8)
8. அங்கீகாரமற்ற அதிவேக செய்தி (4)
13. குப்புற விழுந்ததால் மேன்மை இழந்ததோ மாணிக்கவாசகரின் படைப்பு?(4)
14. சுபா சிரித்தால் வேலை கிடைப்பது நிச்சயம் (4)
15. ஒரு வகை மரத்தடியில் ஒரு கசையடி (5)
17. பிள்ளைத் தமிழ் சொல்லும் நிலாப் பருவம் (4)
19. அதிகமாக (2)