குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


இன்றைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கணிதம், அறிவியல் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற ‘முக்கியமான’ பாடங்களையும் படிப்பதால் தமிழ் போன்ற ‘முக்கியமில்லாத’ பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் அவர்களின் பொன்னான நேரத்தைக் கடன் வாங்கி அதில் சில தமிழ் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லலாம். ஒரு வேளை அதன் மூலம் சிறிது தமிழ் ஆர்வம் அவர்களுக்கு வரலாம். அதற்கான் சிறு முயற்சி தான் இது. சிறிய புதிர், சில எளிய சொற்கள், கொஞ்சம் சிலேடைகள் என்று என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.  கட்டங்களுக்குள் தமிழில் தட்டச்சு செய்யலாம். சரியான எழுத்தை உள்ளிட்டால் அந்த கட்டம் பச்சை நிறமாகும். இது வேலை செய்யாவிட்டால் வழக்கம் போல் ப்ரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கதிரவனும் தேசத் தந்தையும் சேர்ந்த பூ (6)

3. ஆடி மாதம் 18-ஆம் நாள் நடனமாடிக் கொண்டே வீட்டைச் சுத்தம் செய் (7)

5. மரங்கள் நட்டு நீர் ஊற்றியதால் கிடைத்த பச்சை தன்மை (3)

7. வெயில் விரும்பும் பழம் – திருடி (3)

மேலிருந்து கீழ்:

2. அகர முதல’ என்று துவங்கும் நூல் (6)

3. துவக்கம் (5)

4. பெரிய இங்க் பாட்டில் வாங்கிய கர்வம் (3)

6. ப்ரவுன் நிற உடல், கருப்பு நிறத் தலை, வால் நுனியில் சிறிது இளம் வெள்ளை நிறம். என்ன பறவை இது?

7. பழம் –  _____ இருப்பக் காய் கவர்ந்தற்று (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

தமிழ் குறுக்கெழுத்து 16 – (மீண்டும்) தேர்தல்


தேர்தலை மையமாக வைத்து அமைத்த புதிரைப் பலரும் விரும்பி முயன்றதால் மற்றொரு புதிரையும் அதே களத்தில் அமைத்துள்ளேன். “மறுபடியும் முதல்ல இருந்து கோடு போடுறதா” என்று கேட்காமல்  இந்தப் புதிரையும் ஒரு கை பார்க்கவும். கட்சி வண்ணங்களைக் கண்டு குழம்பாமல் உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள் – வெள்ளை கட்டங்களில் மட்டும் விடைகளை நிரப்பி.

விடைகளை vijayshankar.twwi@gmail என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது புதிரின் கீழே உள்ள பின்னூட்டத்திலோ அனுப்பலாம். வெல்க தமிழ்.

இடமிருந்து வலம்:

2. முதல்வர் வேட்பாளர்களில் அதிகம் படித்திருப்பவர் (5)

4. சின்னக் கோயமுத்தூரில் நின்று திரும்பிப் பார்த்தால் கோபால்சாமி வருகிறார் (2)

6. அரசு இயந்திரம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல் இயந்திரம் இந்த முறையில்தான் வேலை பார்க்கிறது (4)

7. பாட்டெழுதும் சின்னம்? (3)

xwrd16

9. காங்கிரஸ் தேர்தல் சின்னத்தை நினைவின்றி எங்கேயோ வைத்துவிட்டேன் (3)

10. இடுப்பு மெலிந்தும், சந்தி சிரித்ததால் மறுபடியும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் (7)

13. கண்காணிப்புக் குழுவினரின் அதிரடி பெயர் (5,2)

14. பரப்புரையில் ஒருவரைக் குறிவைத்துத் தாக்கும் சொல்வீச்சு?

16. பட்டியலில் முதலாவது பொறுப்புக்காக ஏங்கு (3)

18. எல்லாக் கட்சிகளும் வேறு வழியின்றி ஒழிக்கக் காத்திருப்பது (2)

19. ஓட்டு வேணுமின்னா சேரிக்கு வாங்க… ங்… இல்ல, வேணாம் (3,3)

20. தேர்தலுக்கு முன்பே மக்களுக்குக் கிடைக்கும் இலவசம்! (6,3)

 

மேலிருந்து கீழ்:

1. கோடை வெயிலில் காரசார மேடைப் பேச்சுக்களால் தேர்தல் இப்படித்தான் சூடு பிடிக்கும் (3,5)

2. யார் வெல்வார்கள் என்கிற இந்தக் கேள்வியை வாக்களித்துத் துகளாக்கு (3,2)

3. முதல்வரின் சிறுவயது பெயர் (6)

6. தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ள உபரி மின்சாரம்? (4 அல்லது 2,2)

8. (கீழிருந்து மேல்) பெருந்திரள் (3)

11. தேர்தல் திருவிழா நேரத்தில் நமது மாணவர்கள் தயாராகிறார்களே, எதற்கு? (5)

12. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எப்போதுமே இரண்டாம் எழுத்து ஈரைந்து இருக்கும் (4)

13. மதிமுமக் கயிற்றால் சுழல்கிறது (5)

15. ஆரியர், திராவிடர், ஆண்விழை ஆடவர், பெண்விழை பெண்டிர், சேர்கையில் எல்லோரும் … (4)

17. திருமாவளவன் வளர்த்த கட்சி இப்போது சுருங்கி விட்டது (3)

 

 

 

தமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல்


சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் கடமையைச் செய்யாமல் இருந்தால் எப்படி? குறுக்கும் நெடுக்குமாக யோசித்து சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள். தேர்தல் நேரத்தில் நாம் அடிக்கடி கேட்டிடும் சொற்களே இங்கே பெரும்பாலான விடைகளாக வந்துள்ளன.

இந்தக் குறுக்கெழுத்து ஐந்துக்கு எத்தனை மதிப்பெண் பெறும் என்பதை மேலே உள்ள ஐந்து நட்சத்திர சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க மறந்துவிடாதீர்கள்.

இடமிருந்து வலம்:

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற பட்டியல் (4, 4)

3. தட்சிணாமூர்த்தியின் அடைமொழி (4)

7. உன் வாக்கினைச் செலுத்தும் உரிமை ___ (3)

8. பல கட்சிகளின் ஒருங்கிணைவு (4)

xwrd15

தமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல்

9. ஓட்டு போடுவதால் ஏற்படும் குதூகலம்? (6)

11. பாராளுமன்றம் சுருங்கியதால் எஞ்சியது வாற்கோதுமை மட்டுமே (3)

12. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் படிவம் (3,2)

15. கட்சி சார்பாகப் போட்டியிட இந்த மண்டைச்சாயம் அனுமதிக்க வேண்டும் (3)

16. வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை (6)

17. தனக்கென இருக்கும் நிச்சய ஓட்டுக்கள் (3,3)

18. போட்டியிடுபவரின் அடையாளம் (4)

மேலிருந்து கீழ்:

1. தேர்தல் நடத்தும் இ.ஆ.ப. அதிகாரி (4,4)

2. வாக்களித்த அடையாளம் (3,1)

3. மக்கள் கருத்தறிந்து தரப்பட்ட நிகழ்தகவு (9)

4. அனல் பறக்கும் மேடைப்பேச்சு கேட்கக் கூடும் பெருந்திரள் (7)

5. அதிக வாக்குகள் பெற்றிருப்பவரின் நிலை (4)

6. தமிழ் பிரச்சாரம் (5)

7. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு (5)

10 & 13. சத்தம் கூட்டி, பேச்சாளரின் தாக்கத்தை அதிகரிக்கும் கருவி (2,4)

12. போட்டியாளர் (5)

14. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது (4)

15. (அ.தி.மு.க. நீங்கலாக) கட்சி முதல்வரைத் தொண்டர்கள் இப்படி அழைக்கிறார்கள் (3)

விடைகள், விமர்சனங்கள் தேர்தலுக்கு முன்பாக வந்து சேர வேண்டிய மின்னஞ்சல் vijayshankar.twwi@gmail.com

மாற்றாக, கீழுள்ள பின்னூட்டம் (comments) வழியாகவும் விடைகளை அனுப்பலாம்.

சோதனை முறையில் கீழுள்ள கட்டங்களில் தமிழ் தட்டச்சு செய்து பார்த்து விடைகளை சரிபார்க்க முயற்சிக்கலாமே! விதிப்படி சரியான எழுத்து உள்ள கட்டம் பச்சை நிறத்திலும் தவறானது இளஞ்சிவப்பு நிறத்திலும் மாற வேண்டும்.

தமிழ் குறுக்கெழுத்து 14


பொன்னியின் செல்வன் படிக்காதவர்களும் பிடிக்காதவர்களும் (யாராவது இருந்தால்) புதிர் 13-ஐ விரும்பியிருக்க மாட்டார்கள். அதே வேளை தமிழ் ‘தி இந்து’வில் இந்த தளத்தைப் பற்றிய பதிவு ‘நெட்டெழுத்து’ பகுதியில் வந்தமையால் பல புதிய நண்பர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது (அந்த பதிவை இங்கே படிக்கலாம்). மீண்டும் ஒரு ‘பொதுவான’ குறுக்கெழுத்துப் புதிர் இதோ. சில நேரடி குறிப்புகள், சில பொது அறிவு குறிப்புகள், சில பிறழ்மொழிகள்… தமிழில் கலக்குங்கள்.

விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com

இடமிருந்து வலம்

1. சேர சோழ பாண்டியர் பற்றி 2700 பாடல்கள் – அனைத்தும் கிடைக்கவில்லை, ஆனால் தொகை மாறவில்லை (7)

4. பேச்சு வாக்கில் காய்ந்து முற்றுப் போலியான மருதாணி  (4)

6. வடமொழி மேன்மையைப் பறித்த போதிலும் பெயரில் இவள் நாயகி (2)

8. இனி என்ன செய்வது என்பதை ஒரு மார்க்கமாகக் கேள் (2,3)

10. என்ன தைரியம் – எல்லோரும் பார்த்திருக்கையில் ஆடை மீது கை வைக்க (5)

11. மு. கருணாநிதி துவக்கி வைத்த இன்ப வெளிப்பாடு (7)

14. சூரிய உதயம் காட்டும் பருவப் பெண்? (3)

குறுக்கெழுத்து 14

குறுக்கெழுத்து 14

15. கதை சொல்லி ஆடும் நடனம் (4)

17. ஶ்ரீரங்கம் ரங்கராஜன் (3)

19. தேனீக்கள் தந்ததல்லடீ, இது வேறு (3)

20. தீய்ந்தாலும் சுவையான படிவு (4)

22. இறுதியாகவே நடந்த குழப்பத்தில் முடி வேக வா (5)

24. வானிலிருந்து அப்பம் வேண்டி எழுதிய கடிதம் (6)

25. இந்திய ஏவுகணை மனிதருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தரலாம் (6)

மேலிருந்து கீழ்

1. முழுக்க முழுக்க போதையில் எரிந்ததால் ளகர மயக்கத்தில் அணைந்த்த தீபம் (2,2,4)

2. மதுக்கடைகளை மூடினாலும் தொந்தரவு பல (3,2 அல்லது 5)

3. செய்து பாராளுமன்றத்தின் அழகைக் கெடுக்கும் அமளி (3)

4. கருஞ்சாயக் கண்? (3)

5. பாரதி அழைத்த குட்டிப் பறவையே (6,3)

6. இஞ்சி இடுப்பழகன் (6)

11. முதுமையின் இருப்பிடம், சுருக்கெழுத்தில் (4)

12. விருது (3)

13. சுப்பு ரத்தின தாசன் (3)

16. அண்மையில் ட்விட்டரில் தமிழர் கீச்சி அசத்திய வாழ்த்து (3,3)

18. பாரதி (4)

19. மற்றதைப் படிக்கும் அதே வாரம் இந்த சைவப் பதிகங்களையும் படிக்க முயன்றேன் (4)

22. சேலைத் தலைப்புக்கும் முன்னால் வந்து (3)

23. யானை (3)

http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்


தமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா? கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

இடமிருந்து வலம்

1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன்  (9)

5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)

7. நம்பியின் இயற்பெயர் (4)

8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)

10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)

11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)

13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)

14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)

17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)

18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)

xwd13.001

மேலிருந்து கீழ்

1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)

2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)

3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)

6.   பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)

9.   வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)

10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)

11. தலைநகரம் (4)

12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)

15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)

16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)

12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து


12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும் அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற?’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன? ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.

இடமிருந்து வலம்:

xwrd121. ஒளி எடுத்துக் கொண்ட selfie? (6)

5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)

6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு  (3)

8. நிறை (3)

9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)

11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)

மேலிருந்து கீழ்:

2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)

3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)

4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)

6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)

7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)

9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)

10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)

இலக்யா குறுக்கெழுத்து 11


மகாமகம் ஆகப் போகிறது, போன குறுக்கெழுத்துப் புதிர் பதித்து. தெரிந்த கொஞ்சம் யுத்திகளும் மறந்து விட்டது. Symmetry மாறாமல், இரண்டெழுத்துச் சொற்கள் வராமல், எந்த சொல்லும் தனிமையில் தொங்காமல் எப்படியோ ஒரு புதிர் அமைத்துள்ளேன். ஓரிரு அருஞ்சொற்கள், பிறழ்மொழிகள் (anagrams), என்னைக் கொல்லத் தூண்டும் கடி ஜோக்குகள் (!) என்று உங்கள் நேரத்தைக் கடன் வாங்க என்னுடைய இன்னொரு முயற்சி. விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com இடமிருந்து வலம் 1. கேள்விச் செல்வம் வந்தடையும் பாதை? (2,2) 3. போர் பயிற்சி முடிக்க வாத்து பட்ட பாட்டை என்ன சொல்ல? (4) 6. தறிகெட்டு ஆடடி வேடம் கலைந்திட (3) 7. தட்பவெப்பம் தெரிந்து கொள்ள நிபுணரின் தன்னிலை வாக்கை அறி, தன்னை நீக்கி (3,4) 9. தமிழ் கடவுளின் திருவடியில் விடை தேடு (3,2)xwrd11 10. எப்போதும் பார்வையில் படும்படி அமர் (2,2,2) 14. நய வஞ்சகன் சூழ்ச்சி செய்ய வந்தான் – கரிய படம் புவியரசன் தலையும் சேர (4,3) 16. பெண்ணாம் பெரியதாம் (3) 17. ஊர்களை வட்டமிடு லாவகமாக (4) 18. கரையான்களுக்குப் பிடித்த இலக்கியம்? (2,2) மேலிருந்து கீழ் 1. மங்கள்யான் தோஷம்? (4) 2. அடர்ந்த, வானுயர்ந்த சோலை (3) 3. குரைக்கும் நாய் கடிக்க வராது என்றால் குறைக்கத நாய் …… (4,3) 4. பேச்சு வழக்கில் குடிக்கூலி கேள் (3,1) 5. மழை நீர் சொட்ட கொஞ்சமே கொஞ்சம் மது போதும் (4) 6. பனிரெண்டு ஆக இத்தனை முறை நதியில் அமர் (3) 8. தமிழர் தமிழை அதிகம் பயன்படுத்தாதது பாரதிதாசனின் உவமை நஞ்சாகி விடும் என்பதாலா? (7) 10. நேரம் கடத்த அரட்டை அடி (2,2) 11. ஆறுமுகம் திரும்பிய போதும் எண்ணிக்கை மாறவில்லை (4) 12. இடது புறம் (3) 13. அறுபத்து நான்கு, பெயரெச்சம் (4) 15. சிட்டுக் குருவியின் முட்டை போன்ற பூக்களைக் கொண்ட மரம் (3)