தமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்


ஏராளமான வாசகர்கள் விடைகளை அனுப்பிக் குவித்ததால் உள்ளூர் தபால்காரருக்கு என்மேல் ஏகப்பட்ட கோபம். எனவே விடைகளை அறிவித்து விடலாமென்று முடிவு செய்துவிட்டேன். இந்த புதிரின் விடைகளில் ஓரிரு பழந்தமிழ் சொற்களை அறிந்திடலாம். எடுத்துக்காட்டாக, மேலிருந்து கீழ் 2 – வல்லை.

பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது. [இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995] http://ta.wiktionary.org

இத்தனை சொற்கள் இருக்க ‘இதெல்லாம் forest area’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ‘சுத்த காட்டான்கள்’ தான்.

xwrd11ansவிடைகளும் விளக்கங்களும்:

இடமிருந்து வலம்:

3. போர் பயிற்சி முடிக்க வாத்து பட்ட பாட்டை என்ன சொல்ல?

கவாத்து என்பது போர் வீரர்களின் ஆயுதப் பயிற்சியைக் குறிக்கும் சொல்.

6. தறிகெட்டு ஆடடி வேடம் கலைந்திட – ஆடடி கலைந்திட ஆடிட ஆனது.

7. தட்பவெப்பம் தெரிந்து கொள்ள நிபுணரின் தன்னிலை வாக்கை அறி, தன்னை நீக்கி – தடித்த எழுத்துக்களை இப்படியும் அப்படியும் சீர்ப் படுத்திப் பார்த்தால் வானிலை அறிக்கை வரும்.

9. தமிழ் கடவுள் – முருகன்; திருவடியில் – தாளில்

14. கரிய படம் புவியரசன் தலையும் சேர – கபடம் புரிய (சூழ்ச்சி செய்ய)

15. கரையான்களுக்குப் பிடித்த இலக்கியம் – தமிழ் இலக்கியம் தாங்கிய பல அரிய பனை ஓலைச்சுவடிகளைக் கரையான் தின்றது போக மிஞ்சியதை தமிழ் தாத்தா பத்திரப் படுத்தி நமக்கு அளித்தார்.

மேலிருந்து கீழ்:

3. கடிக்க வரும் – நீங்கள் அடிக்க வருமுன் அடுத்த விடைக்குச் சென்று விடலாம்.

5. கொஞ்சமே கொஞ்சம் – துளி; மது – கள்

மற்றவை எளியவை. விடைகளைப் பார்த்ததும் புரியும்.

சரியான விடைகள் அனுப்பிய ராமராவ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்… பிறிதோர் புதிரில்.

பின்னூட்டமொன்றை இடுக