இலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்


பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.

இலக்யா குறுக்கெழுத்து 25


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)

6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)

7. நீங்களும் நானும் பார்க்க (2,2)

11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)

13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)

16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)

17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே! (1, 4)

 

வலமிருந்து இடம்

10. பழங்காலத் தமிழ் முகம் (4)

மேலிருந்து கீழ்

2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)

3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1, 3)

4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)

5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)

7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)

8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை? (3)

9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்? (5)

12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)

14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)

15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)

 

xwrd25

இலக்யா குறுக்கெழுத்து 24


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

 

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா? (3)

5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)

6. நண்பா! சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்! (4)

7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)

8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)

10. மரமாய் நின்று பரவு (2,2)

11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)

13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது! (4)

17. _____ முத்தல்லவோ! (4)

18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்? (4)

20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)

வலமிருந்து இடம்

16. ராமனின் தோழன் (3)

மேலிருந்து கீழ்

1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)

2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)

3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)

4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)

8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)

9. குருதிக் குழாய் (3)

12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)

13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு! (4)

கீழிருந்து மேல்

14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)

15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)

19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)

21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)

இலக்யா குறுக்கெழுத்து 24

இலக்யா குறுக்கெழுத்து 23


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 22-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்? (3)
6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)
7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)
8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை! (6)
9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)
10. பசுமை தாங்கிடும் காடுகளுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)

xwrd23

 

மேலிருந்து கீழ்

1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)
2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)
3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)
4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)
8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)
9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)

இலக்யா குறுக்கெழுத்து 22


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 21-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)
4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)
5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)
8. ஒளி வீசி இரு (3)
11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ? (3)
14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)
15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)
16. மற்போர் வீரன் (4)

xwrd22

மேலிருந்து கீழ்

1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)
2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)
3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)
6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)
7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)
9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)
10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)
12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)
13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா? (3)

 

இலக்யா குறுக்கெழுத்து 21


இலக்யா குறுக்கெழுத்து 20-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:
இடமிருந்து வலம்
1. ஆகாயத்தின் எல்லையை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவான் (4)
3. மாவுப் பொருளுக்கு வண்ணம் கொடு (1,1)
7. ஒரு மதிப்பெண் கூட இழக்கவில்லை (5, 2)
9. நெற்றிப் பொட்டு (4)
10. உரக்கலவை சில களைகளையும் நீக்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி (3)
11. தான் நெற்றியில் சூடிய அணிகலனின் பெருமையை ஊரெல்லாம் முரசு அடித்துச் சொல்லாத குறைதான் (6)
12. சினிமா சினிமா என்ற பிதற்றல் தெளிவதற்குள் பங்குனியே வந்து விடுகிறது (2)
15. பாறை இடுக்கினுள் சற்றே உற்றுப் பார்த்தால் ஒரு பெரும் படையே தங்கியிருக்கிறது (3)
16. கம்பி திருடும் கள்வனைப் பார்த்ததும் கம்மென்று தப்பித்து வந்திடு (5)
17. ஓலைச் சுவடியில் எழுதும் பேனா? (2)

xwrd21

மேலிருந்து கீழ்
1. மொத்த விலை கொடுத்து சரடு வாங்கிக் கோர்த்தால் சங்க இலக்கிய புத்தகம் ஒன்று கிடைக்கிறது (2, 2)
2. முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு வந்த இல்லற வாட்டம் பந்த சொந்தங்களையும் குழப்பி, அறம் அறுக, பறக்க முடியாத பருவமாய் ஆக்கி விட்டது (5, 4)
4. மனதார கைகளுக்குள் பார்த்தால் விண்மீன் தெரியும் (3)
5. கூட்டணி கட்சிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (3, 5)
6. வசீகரத்தால் அவளை மயக்கம் கொள்ளச் செய் (3,1)
8. நூல் அதிகம் சேர்ந்து விட்டதனால் தினம் போய் படிப்பது நலம் (4)
11. ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் சின்ன வித்தியாசம் தான் (4)
13. மிகச்சிறு வாணிபத்தில் பணம் ஆறாக ஓடுகிறது (4)
14. எடையைக் கொண்டு வெற்றிடம் நிரப்பு (2)

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா? குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்


 

இந்தப் பதிவில் குறுக்கெழுத்துப் புதிர்கள் எப்படி வடிவமைக்கப் படுகின்றன, கடினமான குறிப்புகளை எவ்வாறு அச்சு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடைகளைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், குறுக்கெழுத்துப் புதிர்களை வைத்துக் கொண்டு இடியே விழுந்தாலும் அசராமல் பேனாவைக் கடித்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் அவ்வளவு அறிவாளிகளா?

அறிவுத்திறன் என்பதற்கு முழுமையான ஒற்றை விளக்கமோ அளவுகோலோ கிடையாது. கடினமான கணக்குகளை எளிதில் கையாளும் கணிதவியலாளர், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியாளர், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு நடுநிலையுடன் தீர்ப்பு சொல்லக் கூடிய நீதிபதி, நோய்களை அவற்றின் தன்மைகளைக் கொண்xwrd_9டு அறிந்து தீர்க்கும் மருத்துவர், காட்சிப் பிழைகளைக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் மாயாஜாலக்காரர், உடனடியாக புதிய ஒரு விடுகதையை உருவாக்கி நம்மிடம் விடை கேட்கும் பாட்டிகள் என்று அனைவரும் அவரவர் வழிகளில் அறிவுத்திறன் மிக்கவர்களே. அதே போலத் தான் குறுக்கெழுத்துப் பிரியர்களும்.

குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதால் ஒருவருக்கு அறிவுத் திறன் வளர்கிறது என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அறிவுத்திறன் மிகுந்தவர்களால் தான் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடையளிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

அண்மையில் நடந்த உளவியல் ஆய்வுகளில்[1] குறுக்கெழுத்துப் பிரியர்களின் தன்மைகள் பற்றி பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவற்றுள் சில:

1. இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி (பல்கலைக்கழக அளவில்) பயின்றுள்ளனர். அவர்களிலும் 10% பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

2. குறிப்பாக STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் பயின்றவர்கள் இதில் அதிகம்.

3. இசை, விளையாட்டு போன்ற பிற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பயிற்சிக்காக அதிக நேரம் செலவழிப்பது இல்லை.

4. மேற்கண்ட துறைகளில் கிடைக்கும் அளவுக்கு குறுக்கெழுத்து ஜாம்பவான்களுக்கு மாபெரும் பரிசுகளோ புகழோ கிடைப்பதில்லை. அதே வேளை இவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ மன அழுத்தமோ குறைவு. ஆனால் ஆர்வம் பிற துறையினரைக் காட்டிலும் கொஞ்சமும் குறைவதில்லை. எனவே தங்கள் தினசரி வாழ்வில் ஒரு சிறு பகுதியை இந்தப் புதிர்களுக்காகச் செலவிட்டு உடல் இளைப்பாறும் அதே நேரம் மன மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

“அப்படியானால் மொழியியல், கலை, போன்ற துறையினரால் குறுக்கெழுத்து விடைகளைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? எங்கே, ஒரு புதிர் கொடு பார்ப்போம்!” என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம். குறுக்கெழுத்து முனைவோருக்கான ஒரு பொதுவான இயல்பு அவர்கள் சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் problem solvers-ஆக இருப்பது தான்.

இவை எல்லாம் பெரும்பாலும் cryptic crosswords எனப்படும் சங்கேதக் குறிப்புகள் அடங்கிய குறுக்கெழுத்துப் பிரியர்களுக்கே பொருந்தும். வாரமலரில் வரும் ‘நன்றியுள்ள விலங்கு’, ‘நேருவின் விருப்பமான மலர்’ என்பன போன்ற புதிர்களுக்குப் பெரிய அறிவுத்திறன் தேவை இல்லை.

மாறாக,

சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)

என்ற குறிப்பை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புதிரின் விடையை கூகிள் தேடல் மூலமாக நேரடியாக அறிய முடியாது (இந்தப் புதிருக்கான விடை உள்ள இணைய தளத்துக்குச் சென்று வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்).

இதில் கோபாலன் என்பது முக்கியமான குறிப்பு. ‘சின்ன கோபாலன்‘ என்பதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் கோபாலன் என்ற பெயரைச் சுருக்கினால் கோபால் அல்லது கோபு என்று வருகிறது. கேள்வியின் அடுத்த பகுதியில் ‘கோபுரம் அளவில் பாதி‘ என்ற குறிப்பைக் கவனியுங்கள். கோபுரம் – இதில் பாதி ‘கோபு‘ என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, சின்ன கோபாலன் = கோபுரம் அளவில் பாதி = கோபு.

இன்னொரு எடுத்துக்காட்டு:

வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)

இதையும் கூகுள் செய்து பார்க்கவும்.

கணிதப் புதிர்களைப் போல் இத்தகைய சங்கேதக் குறிப்புகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மறைந்து இருக்கும் விடையை வெளிக்கொண்டு வரும் நுட்பம் கணிதவியல் திறன் கொண்டோருக்கு எளிதில் வசப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் கணினிகளுக்கு மொழியியல் நுட்பங்களை பயிற்றுவிக்கக் குறுக்கெழுத்துக் குறிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சங்கேதக் குறிப்புகளை decode செய்யக் குறுக்கெழுத்து வல்லுநர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது.

குறுக்கெழுத்துப் புதிர்களில் சங்கேதக் குறிப்புகளை அமைக்கப் பல்வேறு உத்திகள் உள்ளன. அவற்றுள் சில:

  • நேரடி குறிப்பு

தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)

இந்தக் குறிப்பைக் கண்டதும் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சரக்கென்று ‘மது’ என்று விடை சொல்லி விடுவார்கள் அல்லவா? நேரடிக் குறிப்புகள் இப்படித்தான் இருக்கும்.

  • பிறழ்மொழி (anagram)

 ‘உடைந்த’, ‘சிதறிய’, ‘குழம்பிய’, ‘கலைந்த’ என்பன போன்ற குறிப்புகள் வந்தால் Anagram Alert! என்று சுதாரித்துக் கொண்டு, அந்தக் குறிப்பில் உள்ள முக்கியமான சொல்லின் எழுத்துக்களை வேறு வேறு விதங்களில் வரிசைப் படுத்திப் பார்த்து விடை கண்டுபிடித்து விடலாம். எடுத்துக்காட்டாக, 

ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

இதில் திறவுச்சொல் யாகப்பானையின். இதில் இரண்டம் கடைசி (கடைசியில் இருந்து இரண்டாவது எழுத்தான ‘யி’) மறைய, யாகப்பானைன் என்று மாறுகிறது. இந்த எழுத்துக்களை மாற்றி வரிசைப் படுத்திப் பார்த்தால் ‘யானைப்பாகன்‘ வருகிறது. (பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜன் யானைப்பாகன் வேடத்தில் வருவதாக ஒரு காட்சி இருக்கிறது).

  • இணைசொற்கள்

தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)

இதில் தின்பண்டம் என்பது மையக் குறிப்பு. பதிப்பகத்தின் இயந்திரம் = அச்சு; திருகு = முறுக்கு. அச்சுமுறுக்கு (தின்பண்டம்).

  • சிலேடை

இரண்டு வகையான பொருள் தரும் சொற்கள் அல்லது சொல் தொடர்கள் இருக்கும். ஆனால் இரண்டிற்கும் ஒரே சொல் தான் விடையாக வரும்.

பேச்சு வழக்கில் ‘டபுள் மீனிங்’ என்று நாம் சொல்கிறோம் அல்லவா? 

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும் வாலிப சாரல்? (3,2 )

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படுவது = பருவ மழை
வாலிப (பருவ) சாரல் (ஒரு வகை மழை) = பருவ மழை

இரட்டுற மொழிதல் என்ற இந்த வகையிலான இன்னொரு குறிப்பு:

இதற்கு மேல் சபை கூடினால் எல்லாம் தித்திப்பே (4)

இதற்கு மேல் (இனி) + சபை (அவை) = இனியவை
எல்லாம் தித்திப்பே = இனியவை

  • மறைந்திருக்கும் சொல்/சொற்கள்

நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)

நேசமாளிகை – இதில் இருபுறமும் இடிய (இரண்டு பக்கங்களிலும் உள்ள எழுத்துக்களை நீக்க)
நேசமாளிகை = சமாளி

  • பிளவுற்ற சொற்கள்

ஏழு நாட்களுக்கு ஒருமுறை தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)

பல பொருள் வாங்கும் இடம் சந்தை என்று கொள்ளலாம். தாழ்வார சந்தை – இதில் வார சந்தை என்னும் சொற்கள் பிளவுற்று இருக்கின்றன. 

  • எழுத்துக்கள் நீக்கம்

வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)

பொன்னியின் செல்வன் மந்திரவாதி = ரவிதாஸன். இதில் வடமொழி எழுத்தான ‘ஸ’ என்பதை நீக்கிவிட்டால், 
ரவிதாஸன் = ரவிதான் (சூரியன் தான்)

வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)

வேதமோதும் என்பதில் வேதம் போனால்,
வேதமோதும் – வேதம் =  வேதமோதும் = மோது (சண்டையிடு)

  • பின்னிருந்து முன்னாக

ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)

ரத்தம் = குருதி
‘திருப்பு’ என்கிற குறிப்பின் மூலம் பின்னிருந்து முன்னாக எழுத வேண்டும் என்று அறியலாம்.
குருதி (திருப்பினால்) = திருகு

எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!

தெனாலிராமன் ஒரு விகடகவி என்பதை அறிவோம். இடமிருந்து வலமோ வலமிருந்து இடமாகவோ எப்படி எழுதினாலும் விகடகவி விகடகவி தான்.

  • மேற்கண்ட உத்திகளைக் கலந்து தருவது 

இத்தகைய குறிப்புகளில் மேற்கண்ட வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான உத்திகள் கையாளப் பட்டிருக்கும். சொற்பிளவு, பிறழ்மொழி, எழுத்து நீக்கம் என்று மூன்று வகையான உத்திகளும் அடங்கிய ஒரு குறிப்பு:

கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)

‘குழப்பம்’ என்றதும் இது பிறழ்மொழி (anagram) என்று தெரிகிறது. ‘வர தாவியவரில்’ என்பது இங்கே திறவுச்சொற்கள். இதில் வரிவிலக்கு போக (‘வரி’ எழுத்துக்கள் நீக்கப்பட்டால்),

வர தாவியவரில் = தாவரவியல் (புல்லும் பூண்டும் என்பது பல்வேறு தாவரங்களைக் குறிக்கிறது)

இது தவிர Themed Crosswords என்ற குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக வைத்து அமைக்கப்படும் புதிர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து

இதில் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்தவர்கள், அல்லது அதன் கதைக்களம் மற்றும் கதை மாந்தர் பற்றி அறிந்தவர்கள் மற்றவர்களை விட எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்கக் கூடும்.

சுடோகு (sudoku) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு வேலை தரலாம். ஆனால், குறுக்கெழுத்து போல வராது. ஒரு கடினமான குறுக்கெழுத்துக் குறிப்பை வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அதற்கான விடை தெரிந்தவுடன் “ஆஹா , எங்க கிட்டயேவா?” என்று பெருமையுடன், அந்தப் புதிரை உருவாக்கியவரின் திறனையும் பாராcrossword-solving-artificial-intelligence-system-to-help-machines-learn-languageட்டும் அந்த அனுபவம் மன நிறைவையும் தன்னம்பிக்கையையும் தரும்.

சுடோகுவில் அது போல் ‘இந்த எடத்துல எப்புடி எட்டு போட்டேன் பாத்தியா?” என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.

எனவே, குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்க்கிறதோ இல்லையோ, நல்ல புதிர்கள் நிச்சயமாக உங்கள் மூளைக்கு வேலையுடன் சொல் வளத்தையும் சில (பல) சமயங்களில் புன்னகையையும் தரும்.

குறுக்கும் நெடுக்குமாக சிந்தித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  கட்டங்களை நிரப்பும் கட்டதொரையாக இடமிருந்து வலம் வாருங்கள்.

 

 

இலக்யா குறுக்கெழுத்து 20


 

இலக்யா குறுக்கெழுத்து 19-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:

இடமிருந்து வலம்

1. வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)

4. கன்னிக்கு முதன்முதலாய் விரித்த வலை வருத்தத்தையே தந்தது (3)

5. உண்ணும் வேட்கை இருந்தும் உணவு இல்லாததால் தன்னிலை மறந்தது (2, 5)

6. பொறுப்பு மிக்க நிலை வேண்டி கொஞ்சம் பரிதவி (3)

8. திருப்பூருக்கு மிக அருகில் சென்றதும் பயணத்தின் திசையை மாற்ற வேண்டும் (4)

9. அக்னியைக் கண்டம் விட்டு இதைச் செய் (4, 2)

10. நீர் பகிர்வில் நீதியின் நீட்சி குறைந்த போதிலும் நம்மிடம் தான் வருகிறது ஆறு (2)

12. நினைவில் இருந்து அகற்று (2)

13. வான்வெளி எங்கும் குழப்பத்தில் விரவிக் கிடக்கிறது கோம்பள பிரதேசம் (4)

15. மரக்கிளைகளில் ஒருவகை பூச்சிகளால் சேர்த்து வைக்கப் பட்டுள்ள இனிப்புத் தொகுப்பு (2, 3)

16. தூமகேதுவின் குறும்புப் பகுதி? (2)

xwrd20

மேலிருந்து கீழ்

1. மாற்று சாதித் திருமணமானாலும் மணமக்களின் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் (5)

2. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முதல் வல்லொற்றை அகற்றிக் கொக்கரி தீய பற்பம் அடைந்த பிளவைச் சரிசெய்ய (3, 6)

3. சாலைக்குக் கொம்புகள் முளைத்ததால் கானகம் உருவானது (2)

4. சம்பளத்தில் முதல் தவணையைக் கட்டினால் நல்ல போர்வை கிடைக்கலாம் (5)

7. விரிவுரையில் சந்தேகம் தீர்க்க அதிவேகத் தொடர்வண்டியில் ஏற வேண்டியது தான் (3, 3)

10. வடமொழியை நீக்கி விட்டால் நமஸ்தே கூட எனக்கும் உங்களுக்கும் சொந்தமாகி விடும் (3)

11. வேலையை உரிய நேரத்தில் செய்யக் கூடிய ஆற்றல் [இயற்பியல்] (3)

14. சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)

 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 19


இடமிருந்து வலம்

1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)

5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)

6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)

7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)

9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)

10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)

11. விரைவாய் விரைவாய்! அவசரம்! (5)

14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)

16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை? (3)

17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)

xwrd19

மேலிருந்து கீழ்
1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)
2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)
3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)
4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)
8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)
9. ஆடை- தகர்த்திடு (2)
12. பேரிளம்பெண்? (3)
13. வடமொழி சூரியன் (2)
15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 18


இடமிருந்து வலம்

1. தலைவி திரும்ப வரப்போவதில்லை என்பதால் கட்சிக்கு இப்போதைக்கு இது தான் கதி (4)
3. இதை மக்களாட்சியின் திருவிழா என்கிறார்கள் (4)
4 & மேலிருந்து கீழ் 3. இருப்பிடம் கண்டுபிடி (2, 2)
5. விடுமுறை சூரியன்? (3)
7. அபிநந்தன் (3)
8. இனிய வாழ்வுக்கு அறுசுவையுடன் இந்த அணிகலனும் தேவை (5)
10. கொடுக்கும் தன்மை (2)
11 & மேலிருந்து கீழ் 10. எதிரிக்கு இணையாய் இருந்து சமாளி (2, 2)
12. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவிடும் வியாதி (3, 2)
13. நெகிழிப் பை இல்லாததால் மீண்டும் நமக்கு உதவுவது (3)
14. வாக்குகளை உறுதி செய்ய வேட்பாளர்கள் தரும் வாக்கு (5)

xwrd

மேலிருந்து கீழ்

1. குற்றப் புலனாய்வு செய்யத் தேவையான அறிவியல் (6)
2. ஆராய்ச்சியாளர் (4)
3. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்
4. மார்ச் மாதம் ஆங்கிலத்தில் இப்படி வேகமாகக் கடந்து விடுகிறது (4)
6. தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)
9. மதுரை ஆற்றில் கரம் பதி (2)
11. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.