இலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்


பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.

குறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


 

பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில்போர் அடித்துஅமர்ந்திருப்பீர்கள். குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் இருப்பவர்கள் இதை முயற்சிக்கலாம். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 9 x 9 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

xwrd_27

இடமிருந்து வலம்:

1. தேசிய பறவை வண்டி ஏறி வருகிறது (3, 4)

4. கடற்கரையில் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது இந்த channel (5)

6. அழகு குறைந்தபோதும் அறிவழகன் மூளைக்காரன் (3)

7. குழு அமைத்து உடுத்திக்கொள் (2)

9. சோப்பு கொண்டு அடிக்கடி இப்படிச் செய்தல் கிருமிகளை நீக்கும் (1,5)

11. சிலம்பு தேய்ந்து சிலம்பரசன் ஆகிவிட்டது (3)

13. பொருளின் மதிப்பு (2)

14. படத்தில் இருக்கும் பூச்சியின் பெயர் (3)

Dragon_fly

மேலிருந்து கீழ்:

1. ஊட்டியை இப்படியும் பெருமையாகச் சொல்வார்கள் (5,3)

2. வெயிலா மழையா புயலா என்று நமக்கு இப்படிச் சொல்வார்கள் (3, 4)

3. துணியையும் காகிதத்தையும் வெட்டப் பயன்படும் (7)

5. மாமிசம் உண்ணாதவர்களை இப்படியும் சொல்லலாம் (3)

8. தமிழில் 247 இருக்கிறது (4)

10. இளைய சகோதரன் (3)

12. உலகம் (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


இன்றைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கணிதம், அறிவியல் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற ‘முக்கியமான’ பாடங்களையும் படிப்பதால் தமிழ் போன்ற ‘முக்கியமில்லாத’ பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் அவர்களின் பொன்னான நேரத்தைக் கடன் வாங்கி அதில் சில தமிழ் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லலாம். ஒரு வேளை அதன் மூலம் சிறிது தமிழ் ஆர்வம் அவர்களுக்கு வரலாம். அதற்கான் சிறு முயற்சி தான் இது. சிறிய புதிர், சில எளிய சொற்கள், கொஞ்சம் சிலேடைகள் என்று என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.  கட்டங்களுக்குள் தமிழில் தட்டச்சு செய்யலாம். சரியான எழுத்தை உள்ளிட்டால் அந்த கட்டம் பச்சை நிறமாகும். இது வேலை செய்யாவிட்டால் வழக்கம் போல் ப்ரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கதிரவனும் தேசத் தந்தையும் சேர்ந்த பூ (6)

3. ஆடி மாதம் 18-ஆம் நாள் நடனமாடிக் கொண்டே வீட்டைச் சுத்தம் செய் (7)

5. மரங்கள் நட்டு நீர் ஊற்றியதால் கிடைத்த பச்சை தன்மை (3)

7. வெயில் விரும்பும் பழம் – திருடி (3)

மேலிருந்து கீழ்:

2. அகர முதல’ என்று துவங்கும் நூல் (6)

3. துவக்கம் (5)

4. பெரிய இங்க் பாட்டில் வாங்கிய கர்வம் (3)

6. ப்ரவுன் நிற உடல், கருப்பு நிறத் தலை, வால் நுனியில் சிறிது இளம் வெள்ளை நிறம். என்ன பறவை இது?

7. பழம் –  _____ இருப்பக் காய் கவர்ந்தற்று (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.