இலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்


பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.

குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா? குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்


 

இந்தப் பதிவில் குறுக்கெழுத்துப் புதிர்கள் எப்படி வடிவமைக்கப் படுகின்றன, கடினமான குறிப்புகளை எவ்வாறு அச்சு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடைகளைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், குறுக்கெழுத்துப் புதிர்களை வைத்துக் கொண்டு இடியே விழுந்தாலும் அசராமல் பேனாவைக் கடித்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் அவ்வளவு அறிவாளிகளா?

அறிவுத்திறன் என்பதற்கு முழுமையான ஒற்றை விளக்கமோ அளவுகோலோ கிடையாது. கடினமான கணக்குகளை எளிதில் கையாளும் கணிதவியலாளர், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியாளர், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு நடுநிலையுடன் தீர்ப்பு சொல்லக் கூடிய நீதிபதி, நோய்களை அவற்றின் தன்மைகளைக் கொண்xwrd_9டு அறிந்து தீர்க்கும் மருத்துவர், காட்சிப் பிழைகளைக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் மாயாஜாலக்காரர், உடனடியாக புதிய ஒரு விடுகதையை உருவாக்கி நம்மிடம் விடை கேட்கும் பாட்டிகள் என்று அனைவரும் அவரவர் வழிகளில் அறிவுத்திறன் மிக்கவர்களே. அதே போலத் தான் குறுக்கெழுத்துப் பிரியர்களும்.

குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதால் ஒருவருக்கு அறிவுத் திறன் வளர்கிறது என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அறிவுத்திறன் மிகுந்தவர்களால் தான் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடையளிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

அண்மையில் நடந்த உளவியல் ஆய்வுகளில்[1] குறுக்கெழுத்துப் பிரியர்களின் தன்மைகள் பற்றி பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவற்றுள் சில:

1. இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி (பல்கலைக்கழக அளவில்) பயின்றுள்ளனர். அவர்களிலும் 10% பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

2. குறிப்பாக STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் பயின்றவர்கள் இதில் அதிகம்.

3. இசை, விளையாட்டு போன்ற பிற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பயிற்சிக்காக அதிக நேரம் செலவழிப்பது இல்லை.

4. மேற்கண்ட துறைகளில் கிடைக்கும் அளவுக்கு குறுக்கெழுத்து ஜாம்பவான்களுக்கு மாபெரும் பரிசுகளோ புகழோ கிடைப்பதில்லை. அதே வேளை இவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ மன அழுத்தமோ குறைவு. ஆனால் ஆர்வம் பிற துறையினரைக் காட்டிலும் கொஞ்சமும் குறைவதில்லை. எனவே தங்கள் தினசரி வாழ்வில் ஒரு சிறு பகுதியை இந்தப் புதிர்களுக்காகச் செலவிட்டு உடல் இளைப்பாறும் அதே நேரம் மன மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

“அப்படியானால் மொழியியல், கலை, போன்ற துறையினரால் குறுக்கெழுத்து விடைகளைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? எங்கே, ஒரு புதிர் கொடு பார்ப்போம்!” என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம். குறுக்கெழுத்து முனைவோருக்கான ஒரு பொதுவான இயல்பு அவர்கள் சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் problem solvers-ஆக இருப்பது தான்.

இவை எல்லாம் பெரும்பாலும் cryptic crosswords எனப்படும் சங்கேதக் குறிப்புகள் அடங்கிய குறுக்கெழுத்துப் பிரியர்களுக்கே பொருந்தும். வாரமலரில் வரும் ‘நன்றியுள்ள விலங்கு’, ‘நேருவின் விருப்பமான மலர்’ என்பன போன்ற புதிர்களுக்குப் பெரிய அறிவுத்திறன் தேவை இல்லை.

மாறாக,

சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)

என்ற குறிப்பை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புதிரின் விடையை கூகிள் தேடல் மூலமாக நேரடியாக அறிய முடியாது (இந்தப் புதிருக்கான விடை உள்ள இணைய தளத்துக்குச் சென்று வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்).

இதில் கோபாலன் என்பது முக்கியமான குறிப்பு. ‘சின்ன கோபாலன்‘ என்பதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் கோபாலன் என்ற பெயரைச் சுருக்கினால் கோபால் அல்லது கோபு என்று வருகிறது. கேள்வியின் அடுத்த பகுதியில் ‘கோபுரம் அளவில் பாதி‘ என்ற குறிப்பைக் கவனியுங்கள். கோபுரம் – இதில் பாதி ‘கோபு‘ என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, சின்ன கோபாலன் = கோபுரம் அளவில் பாதி = கோபு.

இன்னொரு எடுத்துக்காட்டு:

வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)

இதையும் கூகுள் செய்து பார்க்கவும்.

கணிதப் புதிர்களைப் போல் இத்தகைய சங்கேதக் குறிப்புகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மறைந்து இருக்கும் விடையை வெளிக்கொண்டு வரும் நுட்பம் கணிதவியல் திறன் கொண்டோருக்கு எளிதில் வசப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் கணினிகளுக்கு மொழியியல் நுட்பங்களை பயிற்றுவிக்கக் குறுக்கெழுத்துக் குறிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சங்கேதக் குறிப்புகளை decode செய்யக் குறுக்கெழுத்து வல்லுநர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது.

குறுக்கெழுத்துப் புதிர்களில் சங்கேதக் குறிப்புகளை அமைக்கப் பல்வேறு உத்திகள் உள்ளன. அவற்றுள் சில:

  • நேரடி குறிப்பு

தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)

இந்தக் குறிப்பைக் கண்டதும் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சரக்கென்று ‘மது’ என்று விடை சொல்லி விடுவார்கள் அல்லவா? நேரடிக் குறிப்புகள் இப்படித்தான் இருக்கும்.

  • பிறழ்மொழி (anagram)

 ‘உடைந்த’, ‘சிதறிய’, ‘குழம்பிய’, ‘கலைந்த’ என்பன போன்ற குறிப்புகள் வந்தால் Anagram Alert! என்று சுதாரித்துக் கொண்டு, அந்தக் குறிப்பில் உள்ள முக்கியமான சொல்லின் எழுத்துக்களை வேறு வேறு விதங்களில் வரிசைப் படுத்திப் பார்த்து விடை கண்டுபிடித்து விடலாம். எடுத்துக்காட்டாக, 

ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

இதில் திறவுச்சொல் யாகப்பானையின். இதில் இரண்டம் கடைசி (கடைசியில் இருந்து இரண்டாவது எழுத்தான ‘யி’) மறைய, யாகப்பானைன் என்று மாறுகிறது. இந்த எழுத்துக்களை மாற்றி வரிசைப் படுத்திப் பார்த்தால் ‘யானைப்பாகன்‘ வருகிறது. (பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜன் யானைப்பாகன் வேடத்தில் வருவதாக ஒரு காட்சி இருக்கிறது).

  • இணைசொற்கள்

தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)

இதில் தின்பண்டம் என்பது மையக் குறிப்பு. பதிப்பகத்தின் இயந்திரம் = அச்சு; திருகு = முறுக்கு. அச்சுமுறுக்கு (தின்பண்டம்).

  • சிலேடை

இரண்டு வகையான பொருள் தரும் சொற்கள் அல்லது சொல் தொடர்கள் இருக்கும். ஆனால் இரண்டிற்கும் ஒரே சொல் தான் விடையாக வரும்.

பேச்சு வழக்கில் ‘டபுள் மீனிங்’ என்று நாம் சொல்கிறோம் அல்லவா? 

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும் வாலிப சாரல்? (3,2 )

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படுவது = பருவ மழை
வாலிப (பருவ) சாரல் (ஒரு வகை மழை) = பருவ மழை

இரட்டுற மொழிதல் என்ற இந்த வகையிலான இன்னொரு குறிப்பு:

இதற்கு மேல் சபை கூடினால் எல்லாம் தித்திப்பே (4)

இதற்கு மேல் (இனி) + சபை (அவை) = இனியவை
எல்லாம் தித்திப்பே = இனியவை

  • மறைந்திருக்கும் சொல்/சொற்கள்

நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)

நேசமாளிகை – இதில் இருபுறமும் இடிய (இரண்டு பக்கங்களிலும் உள்ள எழுத்துக்களை நீக்க)
நேசமாளிகை = சமாளி

  • பிளவுற்ற சொற்கள்

ஏழு நாட்களுக்கு ஒருமுறை தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)

பல பொருள் வாங்கும் இடம் சந்தை என்று கொள்ளலாம். தாழ்வார சந்தை – இதில் வார சந்தை என்னும் சொற்கள் பிளவுற்று இருக்கின்றன. 

  • எழுத்துக்கள் நீக்கம்

வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)

பொன்னியின் செல்வன் மந்திரவாதி = ரவிதாஸன். இதில் வடமொழி எழுத்தான ‘ஸ’ என்பதை நீக்கிவிட்டால், 
ரவிதாஸன் = ரவிதான் (சூரியன் தான்)

வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)

வேதமோதும் என்பதில் வேதம் போனால்,
வேதமோதும் – வேதம் =  வேதமோதும் = மோது (சண்டையிடு)

  • பின்னிருந்து முன்னாக

ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)

ரத்தம் = குருதி
‘திருப்பு’ என்கிற குறிப்பின் மூலம் பின்னிருந்து முன்னாக எழுத வேண்டும் என்று அறியலாம்.
குருதி (திருப்பினால்) = திருகு

எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!

தெனாலிராமன் ஒரு விகடகவி என்பதை அறிவோம். இடமிருந்து வலமோ வலமிருந்து இடமாகவோ எப்படி எழுதினாலும் விகடகவி விகடகவி தான்.

  • மேற்கண்ட உத்திகளைக் கலந்து தருவது 

இத்தகைய குறிப்புகளில் மேற்கண்ட வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான உத்திகள் கையாளப் பட்டிருக்கும். சொற்பிளவு, பிறழ்மொழி, எழுத்து நீக்கம் என்று மூன்று வகையான உத்திகளும் அடங்கிய ஒரு குறிப்பு:

கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)

‘குழப்பம்’ என்றதும் இது பிறழ்மொழி (anagram) என்று தெரிகிறது. ‘வர தாவியவரில்’ என்பது இங்கே திறவுச்சொற்கள். இதில் வரிவிலக்கு போக (‘வரி’ எழுத்துக்கள் நீக்கப்பட்டால்),

வர தாவியவரில் = தாவரவியல் (புல்லும் பூண்டும் என்பது பல்வேறு தாவரங்களைக் குறிக்கிறது)

இது தவிர Themed Crosswords என்ற குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக வைத்து அமைக்கப்படும் புதிர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து

இதில் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்தவர்கள், அல்லது அதன் கதைக்களம் மற்றும் கதை மாந்தர் பற்றி அறிந்தவர்கள் மற்றவர்களை விட எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்கக் கூடும்.

சுடோகு (sudoku) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு வேலை தரலாம். ஆனால், குறுக்கெழுத்து போல வராது. ஒரு கடினமான குறுக்கெழுத்துக் குறிப்பை வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அதற்கான விடை தெரிந்தவுடன் “ஆஹா , எங்க கிட்டயேவா?” என்று பெருமையுடன், அந்தப் புதிரை உருவாக்கியவரின் திறனையும் பாராcrossword-solving-artificial-intelligence-system-to-help-machines-learn-languageட்டும் அந்த அனுபவம் மன நிறைவையும் தன்னம்பிக்கையையும் தரும்.

சுடோகுவில் அது போல் ‘இந்த எடத்துல எப்புடி எட்டு போட்டேன் பாத்தியா?” என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.

எனவே, குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்க்கிறதோ இல்லையோ, நல்ல புதிர்கள் நிச்சயமாக உங்கள் மூளைக்கு வேலையுடன் சொல் வளத்தையும் சில (பல) சமயங்களில் புன்னகையையும் தரும்.

குறுக்கும் நெடுக்குமாக சிந்தித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  கட்டங்களை நிரப்பும் கட்டதொரையாக இடமிருந்து வலம் வாருங்கள்.

 

 

கலைஞர் குறுக்கெழுத்து


 

பன்முகத் தன்மை கொண்டவரும், சமூக நீதி மலர்ந்திட உழைத்தவரும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வித்தகருமான கலைஞர் கருணாநிதி அவர்களை மையமாக வைத்து இந்தக் குறுக்கெழுத்தை அமைத்திருக்கிறேன். ஒரு 13 x 13 கருப்பு-வெள்ளை கட்டத்திற்குள் அவரது இயல்புகளையும் சிறப்புகளையும் அடக்குவது என்பது இயலாத காரியம். அவரது உடன்பிறப்புகள் மட்டுமன்றி அவரைப் பற்றிய பொது அறிவு கொண்டவர்கள், மற்றும் குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முயற்சிக்கும் வண்ணம் இந்தப் புதிரை உருவாக்க முயன்றுள்ளேன். பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும். உங்கள் விடைகளை வழக்கம் போல் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கோட்டூர்புரத்தில் ஒரு புத்தகக் கோட்டை (3, 4)

2. ‘தென்றலைத் தீண்டியதில்லை நான், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ – வசனம் இடம்பெற்ற படம் (5)

5. மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைத்த கலைஞர், அவர்களுக்கு வழங்கிய பெயர் (7)

6. குண்டலகேசியைத் தழுவி கலைஞர் எழுதி எம். ஜி. ஆர் நடித்த திரைப்படப் பெயரில் இரண்டாம் பாதி (3)

8. சமூக நீதி வேண்டுமாயின் அனைவரும் ஆகலாம் ________ (6)

10. தன் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துக் கலைஞர் எழுதியது (5, 2)

12. மாநில முதல்வர்களுக்கு இதை ஏற்றிட உரிமை உண்டெனப் போராடி வென்றார் கலைஞர் (6)

14. ‘மூன்றாம் தர ஆட்சி’ என்ற விமர்சனத்துக்குப் பதில் அளிக்கையில் ‘இல்லை இல்லை, இது __________ தர ஆட்சி’ என்று பெருமையுடன் சொன்னார் (4)

15. விவசாயிகளுக்குக் கலைஞர் கொடுத்த ஒரு இன்ப அதிர்ச்சி (4, 5)

kalaignar-xwrd.jpg

மேலிருந்து கீழ்:

1. இலங்கையில் இம்சை செய்த இந்தச் சேனையை வரவேற்க மறுத்தார் (6)

3. கலைஞரின் பூமழை போன்ற சீரான சொற்பொழிவை இப்படியும் சொல்லலாம் (4)

4. நாத்திகர் ஓடச் செய்த தேர் கொண்ட ஊர் (5)

7. உடல் ஊனமுற்றோர்க்கு இவரளித்த மாற்றுப் பெயர் (8)

8. இதயம் இரவலாகத் தந்தவர் (3)

9. அரசியல் தண்டவாளத்தில் கலைஞரின் ரயிலைத் துவக்கிய டால்மியாபுரம் (6)

11. கிரிக்கெட் பிரியர் ஹேட்ரிக் அடித்த தொகுதி (6)

13. அலைகடலென பொதுக்கூட்டம் (3)

கீழிருந்து மேல்:

16. இந்தச் சனி மறைந்தால் தான் சமத்துவ ஞாயிறு பிறக்கும் (2)

விடைகளும் விளக்கங்களும் விரைவில்…

38630410_10214340766926038_3993668150410346496_n

தமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல்


சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் கடமையைச் செய்யாமல் இருந்தால் எப்படி? குறுக்கும் நெடுக்குமாக யோசித்து சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள். தேர்தல் நேரத்தில் நாம் அடிக்கடி கேட்டிடும் சொற்களே இங்கே பெரும்பாலான விடைகளாக வந்துள்ளன.

இந்தக் குறுக்கெழுத்து ஐந்துக்கு எத்தனை மதிப்பெண் பெறும் என்பதை மேலே உள்ள ஐந்து நட்சத்திர சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க மறந்துவிடாதீர்கள்.

இடமிருந்து வலம்:

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற பட்டியல் (4, 4)

3. திரு. கருணாநிதி அவர்களின் அடைமொழி (4)

7. உன் வாக்கினைச் செலுத்தும் உரிமை ___ (3)

8. பல கட்சிகளின் ஒருங்கிணைவு (4)

xwrd15

தமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல்

9. ஓட்டு போடுவதால் ஏற்படும் குதூகலம்? (6)

11. பாராளுமன்றம் சுருங்கியதால் எஞ்சியது வாற்கோதுமை மட்டுமே (3)

12. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் படிவம் (3,2)

15. கட்சி சார்பாகப் போட்டியிட இந்த மண்டைச்சாயம் அனுமதிக்க வேண்டும் (3)

16. வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை (6)

17. தனக்கென இருக்கும் நிச்சய ஓட்டுக்கள் (3,3)

18. போட்டியிடுபவரின் அடையாளம் (4)

மேலிருந்து கீழ்:

1. தேர்தல் நடத்தும் இ.ஆ.ப. அதிகாரி (4,4)

2. வாக்களித்த அடையாளம் (3,1)

3. மக்கள் கருத்தறிந்து தரப்பட்ட நிகழ்தகவு (9)

4. அனல் பறக்கும் மேடைப்பேச்சு கேட்கக் கூடும் பெருந்திரள் (7)

5. அதிக வாக்குகள் பெற்றிருப்பவரின் நிலை (4)

6. தமிழ் பிரச்சாரம் (5)

7. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு (5)

10 & 13. சத்தம் கூட்டி, பேச்சாளரின் தாக்கத்தை அதிகரிக்கும் கருவி (2,4)

12. போட்டியாளர் (5)

14. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது (4)

15. (அ.தி.மு.க. நீங்கலாக) கட்சி முதல்வரைத் தொண்டர்கள் இப்படி அழைக்கிறார்கள் (3)

விடைகள், விமர்சனங்கள் தேர்தலுக்கு முன்பாக வந்து சேர வேண்டிய மின்னஞ்சல் vijayshankar.twwi@gmail.com

மாற்றாக, கீழுள்ள பின்னூட்டம் (comments) வழியாகவும் விடைகளை அனுப்பலாம்.

சோதனை முறையில் கீழுள்ள கட்டங்களில் தமிழ் தட்டச்சு செய்து பார்த்து விடைகளை சரிபார்க்க முயற்சிக்கலாமே! விதிப்படி சரியான எழுத்து உள்ள கட்டம் பச்சை நிறத்திலும் தவறானது இளஞ்சிவப்பு நிறத்திலும் மாற வேண்டும்.

தமிழ் குறுக்கெழுத்து 10


தெண்டுல்கர் நூறாவது சதம் அடித்த பின்பும் பத்தாவது குறுக்கெழுத்து கூட வரவில்லை என்றால் அவருக்கு என்ன மரியாதை? எல்லா கட்டங்களையும் நிரப்பி நீங்களும் சதம் அடியுங்கள்.

பவுண்டரி, கிளீன் போல்ட், அப்பீல், எதுவாகினும்:

vijayshankar.twwi@gmail.com

மின்னஞ்சல் வெறுப்பவர்கள் மறுமொழி பகுதியில் விடை சொல்லுங்கள்.

இடமிருந்து வலம்:

1. மிளகாயால் நாக்கு எரிந்து அலறினாலும் இதுதான் உணவு (4)

3. வாழ்வா-சாவா போராட்டத்தின் இறுதியில் மனைவியின் பிழைப்பு (6)

5. அடித்துப் பிடித்து உதைத்து எறிந்து அல்லோலகல்லோலப் படுத்து (4)

6. நிலாக் காதலன், நிலாக் காதலி (6) 

8. மறுபடியும் மறுபடியும் தைரியமாய் வருகிறேன் – ஆணவத்தில் (3)

10. யதார்த்தம், பண்பு, தன்மை (4)

13. இந்த மாங்கல்யம் நிலைக்க ஐரோப்பா செல்ல வேண்டும் (4)

14. பாசாங்கு செய், பின்பு கரம் காட்டு (3)

17. நியாயம் சொல்பவர் (6)

18. பெயரால் வந்த பெருந்துன்பம் (4)

19.  தாத்தாவுக்கு நான் பெரும் பாசத்துடன் எழுதிக் கொண்டது (6)

20. ஆதி மனிதனின் வீடு? (2,2)

மேலிருந்து கீழ்:

1. யாரையும் மிரட்டிடத் தேவையான அடியாட்களின் எண்ணிக்கை (5)

2. வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)

3. தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)

4. கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)

7. மாற்றம் (3)

9. அரைத்துத் தள்ளு (2)

11. திரைப்படத் தலைவன் (6)

12. தலைக்கு மேல் வேலையை உடனே நிறைவு செய் (2)

13. இதற்கு அப்பால் நீங்கள் மரியாதை இழக்கிறீர்கள்! (2,1)

14. பட்டணத்து ஆகாயம் நோக்கி இடம்பெயர்வான் (5)

15. மூன்றாம் நபர் போன பின்பு கைநீட்டி இலக்கண சுத்தமாய்ப் பேசு (5)

16. விண்ணின்று விழுவது (4)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 9 – விடைகள்

This gallery contains 2 photos.


எதிர்புறமாக எழுதும்படியான குறிப்புகள் இனி தவிர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். The New York Times, The Hindu என்று ஜாம்பவான்கள் எல்லாம் இன்னும் தங்கள் தளத்திலேயே புதிர் விடுவிக்கும் வசதியைத் தராத போது நமக்கென்ன அவசரம்? குறுக்கெழுத்து 9-க்கான விடைகள்:

தமிழ் குறுக்கெழுத்து 9


பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. குறுக்கும் நெடுக்குமாக யோசித்து விடைகளை எழுதித் தள்ளுங்கள் – மின்னஞ்சலில்.

கைகுலுக்க, காலை வாரிவிட, கருத்து சொல்ல, கடிந்துரைக்க:

vijayshankar.twwi@gmail.com

மின்னஞ்சல் வெறுப்பவர்கள் மறுமொழி பகுதியில் விடை சொல்லுங்கள்.

இடமிருந்து வலம்:

1. ஆங்கில முதலெழுத்தின் எதிர்பாராத இடப்பெயர்ச்சி (5)

3. வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)

4. நாயாய் நகைச்சுவை செய் (2)

9. இதுவும் பழம்பொருள் காப்பகமே (3)

10. பாடியவர்க்கும் கேட்டவருக்கும் நாட்டுப்பற்று என்ற மா வரம் தந்தே வெள்ளையரை விரட்டச் செய்த கீதம் (3,4)

11. தாய் _______ வணக்கம் – திரும்பியிருக்கிறது  (3)

12. பாற்கடல் தந்த திரவத்தினும் தித்திக்கும் தமிழ்  (6,3)

16. பாடல் பேரழகி (3)

17. அரவு முடி வசதியாக கையில் சிக்கிட, தியாக  குணம் நீக்கி நிறைவேற்றிய தீர்மானம் (4,3)

18. முதல் உணவு சீரணம் ஆகாததால் குடலில் விளைந்த புண் (3)

19.  அதிகமாக (2)

20. பயத்தில் பெயர் மறந்த பேசும் பறவை (2)

21. இந்திரா காந்தி எழுதிய புதிரில் எழுத்துக்களுக்குப் போதைய இடமில்லை

மேலிருந்து கீழ்:

1. ஏன் கவலை என்றெண்ணாது படித்ததால் விரல் போனது தான் மிச்சம் (5)

2. மேல் தளம் (2)

3. நன்றியுடன் நுகர்தல் (4)

5. சிறைசென்று திரும்பிய மகளைத் தந்தை இப்படித் தான் கொஞ்சி வரவேற்றிருக்க வேண்டும்  (3,5)

6. முட்டாள் மண்டையில் ஆனந்த பூமி (4)

7. பாரதியார் ஆசிரியராய்ப் பணியாற்றிய ஓர் நாளிதழ் (8)

8. அங்கீகாரமற்ற அதிவேக செய்தி (4)

13. குப்புற விழுந்ததால் மேன்மை இழந்ததோ மாணிக்கவாசகரின் படைப்பு?(4)

14. சுபா சிரித்தால் வேலை கிடைப்பது நிச்சயம் (4)

15. ஒரு வகை மரத்தடியில் ஒரு கசையடி (5)

17. பிள்ளைத் தமிழ் சொல்லும் நிலாப் பருவம் (4)

19. அதிகமாக (2)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 8 – விடைகள்

This gallery contains 1 photo.


சத்தியமாக சுயநினைவுடன் தான் இதை எழுதினேன். அரை மயக்கம், கால் மயக்கம் எதுவும் இல்லை. Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 8


இந்த முறை symmetrical grid (பார்த்தால் அப்படி தெரியவில்லையோ?) அமைத்துள்ளேன். இதன் விளைவாக இரண்டெழுத்துச் சொற்களைத் தவிர்க்க முடியவில்லை. (மோசமான குறுக்கெழுத்தின் அடையாளம்?) வழக்கம் போல் உங்களின் விடைகளையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

இடமிருந்து வலம்:

1.எல்லா அறிவையும் சேர்த்து பௌர்ணமியாய் பளிச்சென்று தொடங்குங்கள் (4)

4.நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)

6. சிகிச்சைக்கு முன் மருத்துவர்களும் சிரிப்பில் மங்கையரும் தருவது (4,4)

7. நேர் நேர் (2)

9. ஐயெட்டு பாடல்களி

லும் சென்னை தமிழ் என்ன! (3, 4)

11, 13. நிறைந்த அறிவுக்கு சன்மானம்? (2,2)

14. குழப்பத்தில் களவாடிய குடம் திருமடி சேர்ந்ததால் கிரீடம் அணிய வாய்ப்பு கிடைத்தது (4,3)

16. எழுதியவரும் எழுதியதும் (2)

18. உயர்ந்தோர் போற்றும் கற்புக்கரசி (4,4)

20. கேட்காது (3)

21. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர்த்து (4)

மேலிருந்து கீழ்:

1. தன் பேரில் இருந்த கடைசி சொத்து அழிந்ததும் இசுலாமியனாய் மாறிய முதுமகன் (4)

2.ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)

3. வாகன அன்பளிப்பு –  பணம் இல்லாததால் பொது போக்குவரத்தில் பயணிக்க அச்சம் (4,3)

5. அடுக்கி வைத்ததைக் கவிழ்த்துப் பார்த்தால் தேறுமா? (3)

8. சுவாமியும் நண்பர்களும் வாழ்ந்த கற்பனை நகரம் (4)

10. இதயம் போலவே இரண்டிலும் இத்தனை பகுதிகள் (3, 4)

12. வியங்கோளில் உட்காரவும் (4)

15. இதற்கு மேல் சபை, கூடினால் எல்லாம் தித்திப்பே (4)

17. எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் திறந்து புதிரை அவிழ்க்கவும் (3)

19. சித்திரத்தைக் கையாலும் செந்தமிழை நாவாலும் கற்றுக்கொள் (3)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள்

This gallery contains 1 photo.


‘தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் – அவன் யார்’ என்கிற ரீதியில் கேள்விகள் இல்லையென நம்புகிறேன். Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 7


இந்த தளத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு இன்றுடன் ஏழு கழுதை வயசாகிறது. தொடர்ந்து விக்கிரமாதித்தனாய் இந்த வேதாளத்தின் புதிர்களை விடுவியுங்கள். குறுக்கெழுத்து வல்லுனர்கள் பிழைகளைப் பொறுத்தருளாமல் சுட்டிக் காட்டவும்.

இடமிருந்து வலம்:

1.வல்லினங்களில் நாலைந்தை நீக்கிப் படித்தல் நலம் (4)
2.நகரின் நடுவில் ஒரு நேரச் சிறை (6)
5.சுமக்க முடியாதபடி பெருத்த சாரல் (4)
6.பட்டுப் புடவை கட்டியதால் இறுமாப்பு? (4)

8.போர்க்களத்தில் ராமனின் பெருந்தன்மை (3,2,2,1)
11.முடி நிறம் மாற்றிய ஆசான்? (3,5)
13.திசை தெரியாமல் முகவரி சொல்லத் தடுமாறு (3)
15.புதிய சாயம் வாங்க நேர்ந்தது – பழையன களைய (3)
16.அமோக முள்ளங்கி விளைச்சலில் புகழ்பெற்ற ஒரு புதினம் கிடைத்தது (2,2)
மேலிருந்து கீழ்:
1.பழமொழியின் முன்பாதி கனிந்து கிடக்கிறது (4)
2.சற்றே தவற விட்டிருந்தாலும் விடை கிடைத்திருக்காது; முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் (4)
3.கடற்கரையில் வழுவழுப்பாய் ஒரு பாறைத் துண்டு (5)
4.வேம்பு மணம் நீண்டு வீசியதால் புறப்பொருள் நூலான ஒரு அகப்பொருள் இலக்கியம் (6)
7.என்னுடன் பேசுபவர் என் தனித் தன்மையை மீறி முதலிடம் பிடித்து விடுகிறார் (4)
9.நதிக்கரைகளில் பிறந்ததாம் (5)
10.தமிழ்நாட்டு விமானம் (4)
11.தனக்கு வந்தால் தான் தெரியும் (4)
12.அடுத்ததைப் பார்த்த ஒன்பதின் அலறல் (4)
14.பொய்யா மொழி வெண்பா (3)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்

This gallery contains 1 photo.


கடந்த சில புதிர்களில் எளிமையாகுகிறேன் பேர்வழி என்று cryptic clues அதிகம் இடம் பெறவில்லை. ஆனாலும் எளிமைக்குத் தான் இப்போது வரவேற்பு அதிகம். சென்ற வாரக் குறுக்கெழுத்துப் புதிருக்கான விடைகள் இங்கே: சில விடைகளுக்கான விளக்கங்களைக் காண்போம். 1 – இ. வ. – வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி                        தத்துறு விளையாட்டாலோ தடமுளைப் … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 6


இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள். சில நேரடி கேள்விகளும் எளிய சொற்களும் இடம்பெறுகின்றன. ஒருசில சிலேடைகள் மற்றும் அறிவியல் தமிழ்ச் சொற்களும் இலவசம்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. பழந்தமிழ் டென்னிஸ் வீராங்கனை? (7)

4. அண்டத்தில் நாம் வசிக்கும் காலக்ஸி.  (4)

5. உயிர் காக்கும் உபகாரம் (3, 3)

6. குழந்தையும் தெய்வமும் தோன்றும் இடம்.  (4)

9. சுழலும் விளையாட்டுக் கருவி. (5)

11. கார்பன் – தமிழில் (2)

12. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு. (7)

14. பிளாஸ்டிக் – தமிழில் (3)

15. எப்படியோ இந்த கேள்விக்கான விடை வெளியே தெரிந்து விட்டது! (5)

16. பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் தலையெழுத்து? (2, 2)

மேலிருந்து கீழ்

1 புதுக்கவிதையின் பழைய பெயர் (6)

2. முடி திருத்தகத்தில் வரிசையாக ஒரே சந்ததியினர் (4)

3. திருமணம் ஆகாதவள் – பணக்காரி (3)

4. பயம் கொள்ளலாகாதவர் செய்வது (4)

7. இல்லாமை (4)

8. கடகடவென்று இதை நிரப்புங்கள் (8)

10. உப்பு விளையும் இடம். (5)

13. மங்கையர் செய்தது? (4)

11.கவி பாடும் கட்டுத் தறி வைத்திருந்த கவிஞன். (4)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்

This gallery contains 1 photo.


The nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து 5


இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. பொன்னியின் செல்வன் (5, 4)

5. கடவுள் மனிதனுக்கு சொன்னது (2)

6. மெய்மறந்த கைம்பெண் (3)

7. வெள்ளை ஒளி வானவில் வண்ணங்களாக மாறுதல் (6)

9. கடவுளுக்கு மனிதன் சொன்னது (6)

11. மேன்மை பொருந்தியவர் (2)

12. தேவையற்றதை

நீக்கு (2)

13. குறுகிய இடைவெளியில் அப்பாவி (3)

14. ஒட்டகத்தை ஓட்டியதும் எஞ்சிய மிருகம் (4)

16. கேரள தண்ணீர்?(4)

17. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)

மேலிருந்து கீழ்

1 ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து அறிதல் (5)

2. ஔவையார் தொண்டைமானுக்குச் செய்த அணி (9)

3. பூங்கொத்து (4)

4. புதிய தையலில் விரிசல் (4)

7. மேலாண்மை என்பதை இப்படியும் சொல்கிறார்கள் (5)

8. பொருத்தமற்ற, ஒருதலை காதல் (4)

9. மனிதன் மனிதனுக்கு சொன்னது (6)

10. பாட்டி காலத்தில் தொடங்கிய சித்திரக் கதை. (6)

15. பேரிளம்பெண் (3)

தமிழ் குறுக்கெழுத்து 4


 இன்று நண்பர்கள் தினமாமே… வாழ்த்துக்கள்!

இந்த வார தமிழ் குறுக்கெழுத்து இதோ. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும்  அனுப்பி வையுங்கள்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. 24 நிமிடங்கள்  (3)

2. பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் (4)

6. சொப்பன சுந்தரி மெய் மறந்து கிடக்கிறாள் (3, 3)

10. ஆழ்வார்கள்; இயேசுவின் அடியார்கள் (6)

11. நூறு ஆண்டுகளுக்கும் மேல் சென்னையில் வசிக்கும் வரலாற்றுச் சின்னம்! (4, 5)

13. நடுத்தெரு நாராயணன் எழுதும் இடம் (3)

14. தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)

16. ஆண் பெயர் கொண்ட நதி (8)

17. பூமியில் முக்கால் பங்கு (2)

மேலிருந்து கீழ்

2. கொங்கு நாட்டு வீரர். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடைப்பட்டவர். (3, 5)

3. தமிழ் இன்டர்நெட் (4)

4. ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு (2)

5. எதிரிகள் (4)

7. வடக்கிலும் தெற்கிலும் உண்டு, கிழக்கிலும் மேற்கிலும் இல்லை! (4)

9. இதை எழுதியவன், நேற்று வந்தவன், இவற்றுள் தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது __________ பெயர் (இலக்கணம்) (7)

11. போருக்குப் பின் வரும் என்பது நம்பிக்கை (3)

12. தமிழ் மந்திரி (5)

14. ஜீன்களால் சுமக்கப் படுவது, புதுக்கவிதையில் மீறப் படுவது (3)

15. கண்ணன் அவதரித்த வடமதுரை (3)