தமிழ் குறுக்கெழுத்து 16 – (மீண்டும்) தேர்தல்


தேர்தலை மையமாக வைத்து அமைத்த புதிரைப் பலரும் விரும்பி முயன்றதால் மற்றொரு புதிரையும் அதே களத்தில் அமைத்துள்ளேன். “மறுபடியும் முதல்ல இருந்து கோடு போடுறதா” என்று கேட்காமல்  இந்தப் புதிரையும் ஒரு கை பார்க்கவும். கட்சி வண்ணங்களைக் கண்டு குழம்பாமல் உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள் – வெள்ளை கட்டங்களில் மட்டும் விடைகளை நிரப்பி.

விடைகளை vijayshankar.twwi@gmail என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது புதிரின் கீழே உள்ள பின்னூட்டத்திலோ அனுப்பலாம். வெல்க தமிழ்.

இடமிருந்து வலம்:

2. முதல்வர் வேட்பாளர்களில் அதிகம் படித்திருப்பவர் (5)

4. சின்னக் கோயமுத்தூரில் நின்று திரும்பிப் பார்த்தால் கோபால்சாமி வருகிறார் (2)

6. அரசு இயந்திரம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல் இயந்திரம் இந்த முறையில்தான் வேலை பார்க்கிறது (4)

7. பாட்டெழுதும் சின்னம்? (3)

xwrd16

9. காங்கிரஸ் தேர்தல் சின்னத்தை நினைவின்றி எங்கேயோ வைத்துவிட்டேன் (3)

10. இடுப்பு மெலிந்தும், சந்தி சிரித்ததால் மறுபடியும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் (7)

13. கண்காணிப்புக் குழுவினரின் அதிரடி பெயர் (5,2)

14. பரப்புரையில் ஒருவரைக் குறிவைத்துத் தாக்கும் சொல்வீச்சு?

16. பட்டியலில் முதலாவது பொறுப்புக்காக ஏங்கு (3)

18. எல்லாக் கட்சிகளும் வேறு வழியின்றி ஒழிக்கக் காத்திருப்பது (2)

19. ஓட்டு வேணுமின்னா சேரிக்கு வாங்க… ங்… இல்ல, வேணாம் (3,3)

20. தேர்தலுக்கு முன்பே மக்களுக்குக் கிடைக்கும் இலவசம்! (6,3)

 

மேலிருந்து கீழ்:

1. கோடை வெயிலில் காரசார மேடைப் பேச்சுக்களால் தேர்தல் இப்படித்தான் சூடு பிடிக்கும் (3,5)

2. யார் வெல்வார்கள் என்கிற இந்தக் கேள்வியை வாக்களித்துத் துகளாக்கு (3,2)

3. முதல்வரின் சிறுவயது பெயர் (6)

6. தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ள உபரி மின்சாரம்? (4 அல்லது 2,2)

8. (கீழிருந்து மேல்) பெருந்திரள் (3)

11. தேர்தல் திருவிழா நேரத்தில் நமது மாணவர்கள் தயாராகிறார்களே, எதற்கு? (5)

12. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எப்போதுமே இரண்டாம் எழுத்து ஈரைந்து இருக்கும் (4)

13. மதிமுமக் கயிற்றால் சுழல்கிறது (5)

15. ஆரியர், திராவிடர், ஆண்விழை ஆடவர், பெண்விழை பெண்டிர், சேர்கையில் எல்லோரும் … (4)

17. திருமாவளவன் வளர்த்த கட்சி இப்போது சுருங்கி விட்டது (3)

 

 

 

தமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல்


சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் கடமையைச் செய்யாமல் இருந்தால் எப்படி? குறுக்கும் நெடுக்குமாக யோசித்து சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள். தேர்தல் நேரத்தில் நாம் அடிக்கடி கேட்டிடும் சொற்களே இங்கே பெரும்பாலான விடைகளாக வந்துள்ளன.

இந்தக் குறுக்கெழுத்து ஐந்துக்கு எத்தனை மதிப்பெண் பெறும் என்பதை மேலே உள்ள ஐந்து நட்சத்திர சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க மறந்துவிடாதீர்கள்.

இடமிருந்து வலம்:

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற பட்டியல் (4, 4)

3. திரு. கருணாநிதி அவர்களின் அடைமொழி (4)

7. உன் வாக்கினைச் செலுத்தும் உரிமை ___ (3)

8. பல கட்சிகளின் ஒருங்கிணைவு (4)

xwrd15

தமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல்

9. ஓட்டு போடுவதால் ஏற்படும் குதூகலம்? (6)

11. பாராளுமன்றம் சுருங்கியதால் எஞ்சியது வாற்கோதுமை மட்டுமே (3)

12. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் படிவம் (3,2)

15. கட்சி சார்பாகப் போட்டியிட இந்த மண்டைச்சாயம் அனுமதிக்க வேண்டும் (3)

16. வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை (6)

17. தனக்கென இருக்கும் நிச்சய ஓட்டுக்கள் (3,3)

18. போட்டியிடுபவரின் அடையாளம் (4)

மேலிருந்து கீழ்:

1. தேர்தல் நடத்தும் இ.ஆ.ப. அதிகாரி (4,4)

2. வாக்களித்த அடையாளம் (3,1)

3. மக்கள் கருத்தறிந்து தரப்பட்ட நிகழ்தகவு (9)

4. அனல் பறக்கும் மேடைப்பேச்சு கேட்கக் கூடும் பெருந்திரள் (7)

5. அதிக வாக்குகள் பெற்றிருப்பவரின் நிலை (4)

6. தமிழ் பிரச்சாரம் (5)

7. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு (5)

10 & 13. சத்தம் கூட்டி, பேச்சாளரின் தாக்கத்தை அதிகரிக்கும் கருவி (2,4)

12. போட்டியாளர் (5)

14. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது (4)

15. (அ.தி.மு.க. நீங்கலாக) கட்சி முதல்வரைத் தொண்டர்கள் இப்படி அழைக்கிறார்கள் (3)

விடைகள், விமர்சனங்கள் தேர்தலுக்கு முன்பாக வந்து சேர வேண்டிய மின்னஞ்சல் vijayshankar.twwi@gmail.com

மாற்றாக, கீழுள்ள பின்னூட்டம் (comments) வழியாகவும் விடைகளை அனுப்பலாம்.

சோதனை முறையில் கீழுள்ள கட்டங்களில் தமிழ் தட்டச்சு செய்து பார்த்து விடைகளை சரிபார்க்க முயற்சிக்கலாமே! விதிப்படி சரியான எழுத்து உள்ள கட்டம் பச்சை நிறத்திலும் தவறானது இளஞ்சிவப்பு நிறத்திலும் மாற வேண்டும்.