12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து


12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும் அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற?’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன? ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.

இடமிருந்து வலம்:

xwrd121. ஒளி எடுத்துக் கொண்ட selfie? (6)

5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)

6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு  (3)

8. நிறை (3)

9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)

11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)

மேலிருந்து கீழ்:

2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)

3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)

4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)

6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)

7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)

9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)

10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)

படத்தொகுப்பு

தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்

This gallery contains 1 photo.


The nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading