http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்


தமிழில் வரலாற்றுப் புதினங்கள் பல இருக்கலாம். அவற்றுள் ஒரு புதினமே வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே. விற்பனையில் ஆகட்டும், வாசகர் வரவேற்பில் ஆகட்டும், எழுத்து நடை, கதைக்களம், என்று எல்லாவற்றிலுமே பொன்னியின் செல்வன் தான் சூப்பர் ஸ்டார். 1950-களில் வெளிவந்த இந்த நெடுந்தொடர் இன்றும் (2019) பேசப்படுவதும் போற்றப்படுவதும் இதற்கு சாட்சி. கதைமாந்தர் ஒவ்வொருவரும் சாகா வரம் பெற்று விட்டனர். புதிர்கள் நிறைந்த பொன்னியின் செல்வனை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர் செய்தால் ‘நேயர்களுக்கு’ பிடிக்காமல் போகுமா என்ன?

ஏற்கனவே நான் அமைத்திருந்த ஒரு புதிரை இங்கே காணலாம்.

சென்ற முறையைவிட சற்று எளிதாகவே அமைத்திருக்கிறேன். இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல நண்பர்களிடமும் கூகுளிடமும் ஒட்டுக்கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்கலாம். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம்.

இடமிருந்து வலம்

1. திருமேனியில் 64 போர்க் காயங்கள் கொண்டவர் (8)

3. வந்தியத்தேவன் மனதில் சோழ இளவரசியை அமரச் செய் (4)

5. அருள்மொழியும் தியாகமும், ஆழ்வார்க்கடியானும் ஆபத்தும், வந்தியத்தேவனும் விளையாட்டுத் துணிச்சலும், குந்தவையும் வானதியும், அதேபோல் வானதியும் _________ (6)

7. வந்தியத்தேவனின் முகத்துக்குப் பூங்குழலியின் உவமை; ரவிதாசனின் ரகசிய ஒலி (3)

8. தனது பாட்டனாரின் தந்தை நினைவாகக் குந்தவை நடத்தி வந்த மருத்துவமனை (6)

9. ஒரு வகையில் செம்பியன் மாதேவி அருள்மொழிவர்மனுக்கு இந்த உறவுமுறை (3)

12. வந்தியத்தேவனுக்கு கிடைத்த ‘மாய மோதிரத்தில்’ இருந்த முத்திரை (2, 5)

17. சக்கரவர்த்தியைச் சந்தித்த வந்தியத்தேவன் அவருக்கும் ராஜ்ஜியத்துக்கும் ஆபத்து என்பதை இவ்வாறு கத்தினான் (4)

18. பிணி நீக்குபவர் மைந்தன் (5)

20. பழுவேட்டரையரின் இயற்பெயர் (4, 4)

21. சிவனைப் பற்றி திருமலை அவதூறாகப் பேசியதால் இவர் அடைந்த கோபம் தணிய ஆங்கில வெண்ணெய் தான் சரி (4)

22. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இங்கே தான் எல்லாம் தொடங்குகிறது, ஆடித் திருநாளன்று (2, 4, 2)

xwrd_PS2

மேலிருந்து கீழ்

2.  மேலே புலி, அடியில் கிரீடம். கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடம், கழுத்து அறுபட்ட ஒரு தலை, ஒரு பெரிய பலிக் கத்தி. இவற்றை செந்நிறத்திலான தங்கள் கொடியில் கொண்டவர்கள் இவர்கள் (8)

3. குந்தவையின் ஆஸ்தான சோதிடர் இருந்த ஊர் (4)

4. கடும் காவலையும் மீறி ஆதித்தனின் ஓலையை அரசரிடம் தர வந்தியத்தேவன் துணிந்து நுழைந்த இடம் (3, 3)

6. வந்தியத்தேவன் வாளை விழுங்கி, பின்னர் அவனை அசடுவழியச் செய்த போலி விலங்கு (3)

10. திகிலையும் வியப்பையும் தந்து வந்தியத்தேவன்-கந்தமாறன் நட்பை அதல பாதாளத்துக்குத் தள்ளிய இடம் (4)

11. அருள்மொழிவர்மன் இலங்கையில் ஏற்ற மாறுவேடம் (6)

13. என்னதான் மாமிசம் உண்ணாதவனாக இருந்தாலும் ஆழ்வார்க்கடியானுக்கு இது மட்டும் பிடிப்பதில்லை (3)

14. கொள்ளிடம் அருகே அரச மரத்தடியில் மீன் சமிக்ஜை செய்து காட்டியவன் (7)

15. ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை மீது நம்பிக்கை வைத்து (3)

16. காலாமுகர்களின் முன்னோர்கள் (7)

19. நோயாளியாகவும் ஒருவித கைதியாகவும் படுத்திருக்கும் அழகிய ____ சோழர் (4)

கீழிருந்து மேல்

7. திருமலையப்பன் இவருக்கு அடியான் (4)

http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்


தமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா? கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

இடமிருந்து வலம்

1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன்  (9)

5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)

7. நம்பியின் இயற்பெயர் (4)

8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)

10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)

11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)

13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)

14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)

17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)

18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)

xwd13.001

மேலிருந்து கீழ்

1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)

2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)

3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)

6.   பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)

9.   வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)

10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)

11. தலைநகரம் (4)

12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)

15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)

16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)