குறுக்கெழுத்து 29 – சினிமா பாடல்கள்


திரைப்படப் பாடல்களின் முதல் சொற்களைக் கொண்டு இந்தப் புதிரை அமைத்திருக்கிறேன். 

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 14 x 15 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

 

இடமிருந்து வலம்:

1. என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5, 4)

4 & மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5)

9 & மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4)

10 & மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2)

12. அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4)

14. 2000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3)

15. மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும்

16 & 23. கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4)

17. நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2)

20 & 25. விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2)

22. பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2) 

23. இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும்

24 & மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3)

25. இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும்

மேலிருந்து கீழ்:

1. ரோஜாவுக்குத்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்! (3, 3, 2)

2. இ.வ.24-ஐ பார்க்கவும்

3. ஹாங்காங் லேடி டிகிரி படித்த குழப்பத்தில் ஹாஸ்யம் மறந்துபோய் ஆடிப் பாடுகிறாள் (4, 4)

5 & 13. ரோஜா பூத்திருக்கும் விலாசம் மோகனுக்குத் தெரிய வேண்டுமாம் (2, 4)

6. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்

7. குற்றமற்ற ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான மெய்யன்பே! (3)

8. செம்மலரே! உன்னைக் காண எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பது கங்கை அமரனுக்குத்தான் தெரியும் (7)

11. பெண்களை உவமைகளால் வர்ணித்து வர்ணித்துக் கவிச்சக்கரவர்த்தியே சறுக்கிவிட்டான்! (4, 5)

13. மேலிருந்து கீழ் 5-ஐ பார்க்கவும்

17. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்

18. அன்பானவனே! என் விழியை பம்பாயில் இழந்துவிட்டேன். (5)

19 & இடமிருந்து வலம் 15. தாழம்பூ தலையில் சூடி நடப்பவளே! (4, 5)

21. இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

பின்னூட்டமொன்றை இடுக