http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்


தமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா? கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

இடமிருந்து வலம்

1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன்  (9)

5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)

7. நம்பியின் இயற்பெயர் (4)

8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)

10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)

11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)

13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)

14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)

17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)

18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)

xwd13.001

மேலிருந்து கீழ்

1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)

2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)

3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)

6.   பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)

9.   வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)

10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)

11. தலைநகரம் (4)

12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)

15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)

16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)

6 comments on “தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்

  1. இடமிருந்து வலம்:
    1. ஆழ்வார்க்கடியான்; 5. குடந்தை; 7. திருமலை; 8.????; 10. குரவைக்கூத்து; 11. பனை;
    13.முதலை; 14. படகோட்டி; 17. (வலமிருந்து இடம்) றைவலநி; 18. கெடிலநதிக்கரை

    மேலிருந்து கீழ்:
    1. ஆடித்திருநாள்; 2. வானதிமயக்கம்; 3. யானைப்பாகன்; 4. நந்தி; 6. நந்தினி; 9. ???;
    10. குந்தவை; 11. பழையாறை; 12. கோடிக்கரை; 15. காலன்; 16. ஈட்டி

    Like

  2. 1. ஆழ்வார்கக்கடியான் 1. ஆடிப்பெருக்கு 3. வானதி மயக்கம் 2. தலைப்பாகை 5. குடந்தை 6. பழுவூர் இளையராணி 10. ராஜராஜனின் தமக்கை குந்தவை 11. பழையாறை 12. மாதோட்டம் 15. வேங்கை 16. அம்பு

    Like

  3. பிங்குபாக்: தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன் | இணைய பயணம்

பின்னூட்டமொன்றை இடுக